பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 21, 2009

ஹலோ சொல்லேன்...



ஒரு நொடியில்,
இறந்து பிறந்த......
அனுபவம் உண்டா.....?

எனக்கு இன்றுதான்
வாய்த்தது.....
முதல் பாதி நொடியில்
இறந்தேன் ...
மறு மீதி நொடியில்
பிறந்தேன்.......

எப்போதும் இல்லாத
‘அந்த’
எண்ணத்தின் , திடிர் உபயத்தால்........

கைபேசியில் அழைக்கத்
தொடங்கினேன்..,;
ஒரு பதிலும் வருவதா இல்லை..,
கலவரம் மேலோங்க.....

சம்பந்த.. சம்பந்தா..
எண்களை அழுத்தி.. என்னமோ
பேசினேன்,

இனம் புரியாத பதட்டம்....
அடிவயிற்றில்..... தாக்கம்..
விளங்காத நோக்கம்...

மீண்டும் அவளுக்கு
அழைப்பை அனுப்பினேன்..

“வணக்கம் சொல்லு..டா..”

“அப்பாடா....!!!”

தயவு செய்து இனி அழைத்ததும் ,
எடுத்திடேன்.....
தோழியே...
இன்னொரு முறை தாங்காது......

.........தயாஜி வெள்ளைரோஜா.......

Related Posts:

  • - பிறவிக்கலைஞனும் வைரல் மனிதர்களும் -  நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம். குறிப்பாக ஆசிரியர்களிடம். அதிலும் குறிப்பாக மாணவர்கள் மீது அக்கறையுள்ள ஆசிரியர்களிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்க ந… Read More
  • குரலற்ற கடலலை உன்னோடு பேசுவதற்குஎன்எல்லா வார்த்தைகளும்ஏங்குகின்றனஎம்பி குதிக்கின்றனநீ சொன்னஒற்றைச் சொல்லின்போதாமையால்அவைதினம் தினம் மௌனத்தற்கொலைசெய்கின்றனநான் … Read More
  • - அவர் சிரிச்சா வேற மாறி... -   எழுத்தாளர் ஸ்ரீகாந்தனை சந்தித்தேன்.  வழக்கம் போல பல சுவையானவற்றை பேசி சிரித்தோம்.சிரித்தோம் என்றதும்தான் சொல்லத் தோன்றுகிறது. இயல்பா… Read More
  • நான்ஃபிக்‌ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பு எழுத்தே என் வாழ்க்கையாக அமையவேண்டும் என்பது என் விருப்பம். நான் எழுதுவது ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும் என்றால், யாரோ … Read More
  • ஐஸ் வண்டி அடிக்கும் வெயிலுக்கு ஐஸ் சாப்பிடலாம்  என்றிருந்தேன். நினைத்ததும் மணி சத்தம் கேட்டது.  இப்போதெல்லாம் நினைப்பவை உடனுக்குடன் நடந்துவிடுகி… Read More

2 comments:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் நண்பரே.

மின்னலின் தயாஜி வலைப்பதிவு எழுதுகிறீர்கள் என்பது மகிழ்ச்சி. நல்ல பதிவுகள்.. நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துகள்.

தயாஜி சொன்னது…

nandri nanbare..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்