பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 16, 2026

- அழகுநிலாவின் அழகிய புன்னகை -


சிங்கை எழுத்தாளர் அழகுநிலா மலேசியா வந்திருந்தார். அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் 'மில்லேனியல் அவ்வை' என்னும் குறுங்கதை தொகுப்பை வெளியிட்டிருந்தார். வாசிக்க ஆவலாய் இருந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று என அக்காவிடம் சொல்லியிருந்தேன் (அவரை அப்படித்தான் அழைக்கிறேன்).

இன்றைய சந்திப்பில் 'மில்லேனியல் அவ்வை', 'மொழிவழிக் கனவு', 'சொல் ஒளிர் ககனம்' என்ற அவரது மூன்று புத்தகங்களையும் அவரது கையொப்பத்துடன் பெற்றுகொண்டேன். அதோடு அவருக்கு எனது 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல', 'குறுங்கதை எழுதுவது எப்படி', 'பொம்மி' என்ற புத்தகங்களைக் கொடுத்தேன்.



கிடைத்த கொஞ்ச நேரத்திலும் குறுங்கதைகள் குறித்து பேசியிருந்தோம்.

சிங்கை எழுத்தாளர்களில் நான் விரும்பி வாசிக்கும், வாசித்ததை உரிமையாய்ப் பேசும் எழுத்தாளர்களில் அக்கா அழகுநிலாவும் ஒருவர்.

ஏறக்குறைய பத்தாண்டுகள் கடந்த பின் அவரைச் சந்திக்கின்றேன். அப்போது பார்த்தது போலவே இருக்கிறார். அவரது சிரித்த முகத்தின் ஒளியை நானும் எனக்காய்க் கொஞ்சம் எடுத்து கொண்டு விடைபெற்றேன்.



விரைவில் அவரது புத்தகங்கள் குறித்து எழுதுகிறேன். சமீபத்தில் அவரது சிறுகதைத் தொகுப்பான 'சங் கன்ச்சில்' குறித்து நடுகல்.காம் இணைய பக்கத்தில் எழுதியிருக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் அந்தக் கட்டுரையையும் வாசித்தால் சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் கதையுல்கத்திற்கான முதற்கட்ட நுழைவாயிலாக அது அமையலாம்...


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்