பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 23, 2023

சிறகுகளின் கதை நேரம் 3 – ஆதி.இராஜகுமாரனின் ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’

         ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடல் சந்திப்பில் மூன்றாவது சந்திப்பு சிறப்பாய் நடைபெற்றது. இம்முறை மலேசிய எழுத்து ஆளுமைகளில் முக்கியமானவரும் எங்களின் முன்னோடிகளில் ஒருவருமான ஆதி.இராஜகுமாரனின் ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’ என்னும் சிறுகதையைக் குறித்து...

டிசம்பர் 18, 2023

இரட்சகன்; நடந்தது என்ன ? - 1

 ‘சார் நீங்க வரலையா?’, ‘ஐயா உங்களை சந்திக்க ஆவலாக வந்தோம்?’, ‘புத்தகத்தில் உங்கள் கையெழுத்து வேண்டும்?’, ‘நீங்கள் ஏன் மாணவர்களின் கதைகளுக்கு அறிமுக உரை எழுதவில்லை?’, ’மகன் உங்களுக்காக பரிசு கொண்டு வந்திருந்தார்’, ’உங்கள் உழைப்பு முக்கியமான ஒன்று’, ‘உங்களால்தான் மகன்/மகள் கதை எழுதவே ஆரம்பித்தார்’...

டிசம்பர் 16, 2023

டிசம்பர் 13, 2023

சிறகுகளின் கதை நேரம் 2 – மா.அரங்கநாதனின் ‘சித்தி’

எங்களின் ‘சிறகுகளின் கதை நேரம்’, சிறுகதைக் கலந்துரையாடலில் இம்முறை எழுத்த்தாளர் மா.அரங்கநாதன் எழுதிய சித்தி என்னும் சிறுகதையைக் குறித்து உரையாடினோம் .இம்முறை எங்களின் இணைய சந்திப்பில்; என்னுடன் சேர்த்து பத்துப்பேர் பங்கெடுத்தார்கள்.     இரண்டாம் கலந்துரையாடலில் பங்கெடுத்தவர்கள் ஒவ்வொருவரும்...

டிசம்பர் 09, 2023

உமாதேவி வீராசாமியின் ‘நாசி ஆயாம்’

ஆசிரியரும் எழுத்தாளருமான உமாதேவி வீராசாமியை சந்தித்தேன்.  எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களை  சந்தித்து  உரையாடுவது எனக்கு விருப்பமானவற்றில்  ஒன்று. இம்முறை வேலை நிமித்தமாகச் சந்தித்தேன். அதுவும் கூட எழுத்து குறித்து அமைந்திருந்தது. எழுத்தாளர் உமாதேவி இயல் குழுமம் நடத்திய வெண்பலகை...

டிசம்பர் 07, 2023

சிறகுகளின் கதை நேரம் 1 - தி.ஜானகிராமனின் முள்முடி

 டிசம்பரில் (2023) மீண்டும் சிறுகதைக் கலந்துரையாடலை தொடங்கினோம் . இம்முறை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மணி 8 முதல் 9 வரை என திட்டமிட்டோம் . இணைய சந்திப்பு என்பதால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளலாம் என்பது எல்லோருக்கும் வசதி . அவ்வப்போது நேரடியாக சந்தித்து சிறுகதைகளைப்...

நவம்பர் 30, 2023

வாசகனின் நன்றி

 எழுத்தாளர் பிரியா மொழிபெயர்த்திருக்கும் 'ஒரு வசீகரமான கைம்பெண்ணின் முகம்' சிறுகதைத் தொகுப்பில் 'ஒரு திடீர் தெரிவு' என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ளது. இக்கதையை ஜூமா அல்ஃபைரூஸ் என்பவர் எழுதியுள்ளார். தொடக்கத்திலேயே இக்கதை ஈர்த்துவிட்டது. அடுத்தடுத்த பத்திகளில் நம்மையும் பதைபதைக்க வைக்கிறது. தலையும்...

விழித்திரு; விழிப்புணர்வாய் இரு

 இலக்கியம் எந்த அளவு உன்னதமானது என நம்புகின்றோமோ.. சில சமயங்களில்; அதே அளவு அதனை எழுதும் கரங்கள் ரொம்பவும் கீழ்மையானது என நம்ப வைத்துவிடுகிறார்கள். இலக்கியம் உன்னதமானது என நம்மை நம்ப வைப்பவர்களேத்தான் அதனையும் எந்த ஒரு குற்றவுணர்ச்சி இன்றி செய்துவிட்டு "இலக்கியம் மனிதனை பக்குவப்படுத்துகிறது...

அக்டோபர் 29, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது

 குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது  செப்டம்பரில் தொடங்கிய வகுப்பு அக்டோபரில் நிறைவடைந்தது. இரு மாத வகுப்பாக திட்டமிட்டு அதன்படி அதனை வழிநடத்தி முடித்தோம். பல புதியவர்கள் கலந்து கொண்டார்கள். கவனிக்கத்தக்க எழுத்தாளர்களும் கலந்து கொண்டது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ...

அக்டோபர் 28, 2023

🙏எழுத்தாளர், ஆசிரியர் இராஜேஸ்கன்னி நினைவாக... 🙏

  காலை, தம்பி பிருத்வி அழைத்திருந்தார். ஆசிரியை இராஜேஸ்கன்னி காலமாகிவிட்டதைக் கூறினார். இன்று என் முதல் தொலைபேசி அழைப்பு அதுதான். செய்தி கேட்டதிலிருந்து அதிக நேரம் என்னால் என் இயல்பு நாளுக்கு திரும்ப முடியவில்லை. பாராங்கல்லை சுமப்பது போல இதயம் கணக்கத்தொடங்கியது; அத்தனையும் ஆசிரியை இராஜேஸ்கன்னியின்...

அக்டோபர் 22, 2023

மனமுறிவு

  அம்மா அப்படித்தான் சொல்லியிருந்தார். இனி இவர்தான் எனக்கு அப்பாவாம். ஆமாம் அப்பாவாம்.  அப்பாவா? எப்படி இவர் எனக்கு அப்பாவாக இருக்க முடியும். அப்பா இனிமேல் வீட்டிற்கு வரமாட்டாராம். வரக்கூடாதாம். வாரம் ஒரு முறை மட்டும் வருவாராம். இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அப்பா ஏன் இன்னமும்...

அக்டோபர் 21, 2023

எப்படித்தான் வாழ்கிறார்கள்

  - எப்படித்தான் வாழ்கிறார்கள் - சிறந்த தம்பதிக்கு விருது கொடுக்கும் விழா. அதற்கென்றே சில தம்பதியினர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அவர்களுக்கு தெரியாமலேயே ஒரு குழு ஒவ்வொரு தம்பதியையும் பின் தொடர்ந்தது. தம்பதியரில் யார் சிறந்த தம்பதி என  அறிவித்தார்கள். பலரும் தங்களுக்கு அந்த இடம் கிடைக்காதது...

அக்டோபர் 18, 2023

தீவிரவாதி

 அவனைக் கொல்வதற்கு முன்பாக விசாரித்தார்கள். விசாரிக்காமல் யாரையும் அதிகாரிகள் ஒருபோதும் கொல்வதில்லை. இல்லை இது கொலையில்லை. தண்டனை. அதிகாரிகள் விசாரிக்காமல் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கியதில்லை.அவன் முதலில் அழத்தொடங்கினான். அழுகிறான் அழுதுக்கொண்டே இருக்கிறான். இது அவனது நாடகமாகக்கூட இருக்கலாம்....

அக்டோபர் 17, 2023

ஈரம்

 அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. இந்த யுத்தம் யாருக்காக இருந்தாலும் எந்த மதத்திற்காக இருந்தாலும் யாருடைய ஆணவத்திற்காக இருந்தாலும் அங்கு குழந்தைகளும் பெண்களும்  வயதானவர்களும் நோயாளிகளும் பாதிக்கப்படக்கூடாது. கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்காத அப்படி எந்த தெரியாத எந்த மனிதனையும்...

அக்டோபர் 13, 2023

- வசுமதியின் சிறகுகள் - 2

தலைப்பு : சிறகுகள்எழுத்து : அறிமுக எழுத்தாளர் வசுமதி வகை : குறுங்கதை (எங்கள் குறுங்கதை எழுதும் வகுப்பின் பங்கேற்பாளர்)                    என் உடம்பில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு கருவியின் பயன்பாடும் என்னவென்று  என்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்