கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி
கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி
ஆகஸ்ட் மாத (2016) உயிர்மையில் வந்திருக்கும் மொழிப்பெயர்ப்பு சிறுகதை. மலையாளத்தில் அர்ஷாத் பத்தேரி எழுதியுள்ளதை ஶ்ரீபதி பத்மநாபா தமிழாக்கம் செய்துள்ளார்.
இப்போதெல்லாம் ஶ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த கதையென்றால் நம்பிக்கையாக படிக்கலாம் என தோன்றுகிறது . தொடர்ந்து அவ்வாறான முக்கியத்துவம் கொண்ட கதைகளையே அவர் தமிழாக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கதை.
தன்னிடம் வரும் நோயாளிகள் யாராயினும் அவர்களின் இதயத்தை லேபுக்கு மாற்றுகிறார். பின்னர் அவர்களுக்கு பிளாஸ்டிக் இதயத்தை பொருத்துகிறர் . விரைவாகவே நல்ல இதயத்துக்கு தட்டுப்பாடு வரப்போவதாகய்வும் தன்னைச்சார்ந்தவர்கள் இதயத்தை தேடி அலையும் நிலை வரக்கூடாது என்கிறார்.
அவரின் செயலுக்கு மனதால் சம்மதமின்றி உதவியாய் இருக்கிறார் மேரி.
தன் தங்கை உட்பட , கறுத்த அழகிகள், ஆரோக்கியமான ஆண்கள் என பலரின் இதயத்தையும் களவாட உதவிய மேரிக்கு மருத்துவரை விருப்பத்தை உடைக்க முடியவில்லை.
இதயம் மாற்றப்பட்ட சிலர் மருத்துவரை சந்திக்கிறார்கள். அவர்களால் அழமுடியவில்லை. சிரிக்க முடியவில்லை. கனவுகள் வருவதில்லை என்று புகார் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஆயுட்கால கேரண்டி மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார் மருத்துவர் ஜோ. இம்முறை அவரது குரலில் கட்டளை தொனி இருக்கிறது.
நிறைவாக மருத்துவர் தனக்கு இதுவரை உதவிவந்த தாதி மேரியின் இதயத்திற்கு வருகிறார். மேரி மருத்துவரிடம் அவளது கடைசி ஆசையாக அவரின் இதயத்தை பார்க்கச்சொல்கிறார் .
மருத்துவர் அவரின் இதயத்தைப் பார்க்கிறார். ரத்தம் சதை இல்லாத பிளாஸ்டிக் இதயம். அழுகிறார் . சிரிக்கிறார் .
பின்னர் அவரது ஒவ்வொரு உணர்ச்சியாக கழன்று விழுகிறது . ஏதுமில்லாமல் ஆகிறார்.
கதை இவ்வாறு முடிகிறது.
கதையைக்குறித்து ,
தலைப்பு படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. கதையின் போக்கை யூகிக்க முடியாத்து அதன் பலம்.
இக்கதையை பலவாறு பார்க்கலாம் எனத்தோன்றுகிறது . இக்கதையினை நான் எவ்வாறு பார்க்க நினைக்கிறேனெனில் ,
மற்ற இதயங்களை களவாடி, பிளாஸ்டிக் இதயம் பொருத்தி அவர்களின் உணர்ச்சியை மழுங்கச்செய்து இயந்திரம் போல நடமாடவைக்கிறார் மருத்துவர் . தனக்கு பல நாள் உதவியாக இருப்பவரின் இதயத்தை களவாட முடிவெடுக்கிறார். அவரின் இதயத்தையும் யாரோ களவாடி பிளாஸ்டிக் இதயத்தை பொருத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி தன் உணர்ச்சிகளை இழக்கிறார்.
நாம் மற்றவர்க்கு என்ன செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். நம் குரோதம் பழியுணர்ச்சி நமக்கானதாக இல்லாமல் யாருக்கோ நாம் பலியாடாகிவிடுகிறோம். மருத்துவர் அவர் சார்ந்தவர்களுக்காக இதயத்தை களவாடி வைக்கிறார் . அவராக செயல்படுவதாக நினைக்கிறார். தான் செய்யும் ஆய்வில் வேற்றி பெறுவதாக நினைத்தாலும் அவர் யாருக்காகவோ அதனை செய்கிறார்.
யோசிக்கையில் நாமும் பல சமயங்களில் நமக்கான செயல்களாக நினைத்து யாருடைய புத்திசாலித்தனத்திற்கோ நம்மையும் சேர்த்து பலியாகிக் கொண்டிருக்கிறோம்.
-தயாஜி-
0 comments:
கருத்துரையிடுக