கதை வாசிப்பு 23 - அக்னி
கதை வாசிப்பு 23
அக்னி மற்றும் பிற கதைகள் என்ற சிறுகதை தொகுப்பை படித்தேன். ஸிதாரா.எஸ் எழுதிய மலையாள கதைகளின் தமிழாக்கம் . முதல் கதையான ‘அக்னி’ என்னும் கதை என்னை பீதி கொள்ள செய்தது. இப்படியொரு கதையை சமீபத்தில் படித்ததாய் நினைவு இல்லை. ஒவ்வொரு சிறுகதையும்
ஒவ்வொரு மாதிரியானதுதான். ஆனால்
அக்கதையில் இருக்கும் புதுமையை வாசகர் கண்டுக்கொள்வார்காள்.
ஒரு பெண் மூன்று நபர்களால் கற்பழிக்கப்படுகிறாள். அப்போது அவளுக்கு மாதவிடாய். அவளின் ஆடைகளை கிழித்தெறியும் சமயம் சில நொடி அதிர்ச்சியில் அவர்கள் ஸ்தம்பிக்கின்றார்கள். ஆனாலும் அவளது ஆடையினை அவர்களால் முழுமையாக அவிழ்க்கப்படுகிறது. உலகில் மிகவும் அவமானப்பட்ட பெண்ணாக அவள் ஆகிறாள். இருவரும் அவளை பழிவாங்க மூன்றாவது பதின்ப வயது பையனையும் சேர்த்துக் கொண்டார்கள். அவனும் அவனால் முடிந்ததை அவளுக்கு செய்கிறான்.
அவள் வீடு செல்கிறாள். மறுநாள், அலுவலகம் செல்ல வாசலில் அவளுக்கு அந்த இருவர் காத்திருந்தார்கள். குரூரம் கொண்ட கண்களுடன் விசயத்தை வெளியில் சொன்னால் அவளுக்கும் அவளது குடும்பத்தினர்க்கும் ஆபத்தென எச்சரித்து, வன்மத்துடன்
முதல் நாளை குறித்து கேட்டு சிரிக்கிறார்கள்.
அவள் சில வினாடிகளில் அவர்களின் கண்களையே உற்று
நோக்கி , ஒருவனை பார்த்து இவ்வாறு சொல்கிறாள். “நீங்க ரொம்பவும் போராயிரிந்திங்க,
உங்களுக்கு வீரியம் குறைவாக்கும் ஒரு பொண்ணை பூரணமா திருப்தி படுத்த உங்களால முடியும்னு எனக்கு தொணல” என்று கூறி மற்றொருவனை பார்த்து நீதான் சரியான ஆம்பள உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்கிறாள்.
முதலாமவன் தான் கொண்ட குரூர சிரிப்பை தொலைத்து பழியுணர்ச்சிக்கு
ஆளாகிறான். இனி அவன் அடுத்தடுத்த நொடிகளை எப்படி கழிக்க போகிறான் என நினைக்கையில் வாசகர்களை
அது பீதிக்குள்ளாக்கிறது. அவனது வாழ்நாளில் இனி எந்த பெண்ணையும் அவன் நெருங்கமாட்டான்
என்றே தோன்றியது. அடுத்தவனுக்கான பழியுணர்ச்சியும் சில தினங்கள் அவள் ஏற்படுத்துகிறாள்.
வாசர் மனதில் இக்கதை தங்கிவிடும் என்பது
இக்கதையின் சிறப்பு. பெண்ணின் பலத்தை காட்டும் சிறுகதைகளில் இக்கதை தனித்து
நிற்கும். தனக்கு ஏற்பட்ட வலியை அவமானத்தை இழுக்கை அவள் எப்படி எதிர்கொள்கிறாள்
எப்படி பழிவாங்குகிறாள் என்பதை பார்க்கும்போது நமக்குள் இயல்பாகவே ஓரு அச்சம்
ஏற்படுகிறது.
-தயாஜி-
0 comments:
கருத்துரையிடுக