பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

வியாழன், 26 ஜனவரி, 2012

வார்த்தைகள் தொலைத்து வழிப் பயண மனிதர்கள்வழி நெடுக்க வார்த்தைகள்
கவனிக்க மறந்த கொவத்தின்
வெளிப்பாடாய்
வாசல்வரை ஆயுதங்களுடன்
அதன் அணிவகுப்பு
காலம் காலமாக
சொல்லிக் கொண்டிருந்த
‘அன்பு’
எனும் வார்த்தை
இதுநாள் வரை தான்
பூசிக் கொண்டிருந்த
மென்மை உடன் உண்மை என
ஏமாற்று பூச்சிகளை
அழித்து
ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டமான
இருண்ட விழிகளுடன்
கொலையும் கலையுடன்
நடையும்
நிர்வாண உடையும்
சேர
ஒவ்வொரு வீட்டுக்
கதவின் இடுக்கில்
படுக்கையை மொய்க்கிறது
முனகல் சத்தத்தை
தானும்
முனுமுனுத்தவண்ணம்
கூரைக்கும் பூமிக்கும்
குதியாய் குதிக்கிறது
மூச்சுவாங்க
வியர்த்து வடிய
வெளிவரும் உருவங்களின்
எந்த
உறுப்பிலும்
எந்த
கீறலிலும்
எந்த
பசையிலும்
தான் இல்லாதது
‘அன்பு’-பின்
ஆக்ரோஷத்தை கூட்டுகிறது
உடன்
‘கருணை’
‘பாசம்’
‘நேசம்’
‘நட்பு’
‘நம்பிக்கை’
போன்ற
தோழமை வார்த்தைகளென
தாங்களும் குதித்தலில்
பங்கேற்கின்றன...
குதித்து குத்தித்து கூரைமேல்
இன்னமும்
எந்த ஒரு
பிசகும் இல்லாத
‘காமம்’
வார்த்தைக்கு
கடவுள் என
பெயரிடுகின்றன..
இதுவரை
செய்ததையும்
இனிமேல்
செய்வதையும்
இனியும்
செய்கிறதையும்
பட்டியலிட்டு
குதித்துக் கொண்டிருந்த
வார்த்தைகளை
ஒரு முறை
படிக்க பணித்தது
படித்த வார்த்தைகள்
தாங்கள்
இல்லாத இருப்பிடத்தின்
வெட்டவெளியை
ஒப்புக்கொண்டன
இருக்கைகள் இழந்த
வார்த்தைகள்
கடவுளுக்கு சேவகனாக
விண்ணப்பித்தன
‘காமம்’
கையெழுத்து போடும் முன்பு
பூமியில் எங்கோ ஒரு மூலையில்
அழுகுரல்
குழந்தை பிறந்த அடையாளம்
சேவகம் செய்ய வேண்டிய
வார்த்தைகள்
கொஞ்சம் பெருமூச்சி விடுகின்றன
‘காமம்’ வார்த்தையும் சிரிக்கிறது
வெற்றி யாருக்கு
பிறந்த குழந்தையில்
கதவில்
வாசலைத் தேடி
குதித்துக் குதித்துக் கொண்டே
பயணிக்கின்றன
இதுவரையில் நாம்
கவனிக்க மறந்த வார்த்தைகள்


-----தயாஜி------

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்