பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புதன், 5 ஜனவரி, 2011

கவிதையானவள் கவனத்திற்கு.....உன்னொடு நானும்
என்னோடு நீயும்
பேசும்போது;

மண்ணோடு மக்களை
மறந்து;

வாயேன்.......
விண்ணோடு பறக்கலாம்......

கல் தடுக்கி விழவில்லை
GUN சுட்டும் துழையில்லை......

உன்;

கண்பட்டு விழுந்துவிட்டேன்....
இதயம் வழி துவாரங்களை
விழுங்கிவிட்டேன்.....

ஜீரணிக்கும் ஆசையில்
ஜீன்களெல்லாம் போராட.....

வீண்வம்பில் மாட்டியதாய்
என் மார்பும் பதைபதைக்க....

ஏனோ தெரியாது
என்னவள்;

நீதான் என்ற
எண்ணம் மட்டும்....
என்னுள் சுரக்கிறது....

நுரையீரலும்;
உன் பெயரையே
சுவாசிக்கிறது......

சொர்க்கம் நரகம்...
நம்பிக்கை விதைத்தேன்...

உந்தன் இருவகை
இதழ்பதிவில்....

என் உயரத்தையும் உருக்குவது
உந்தன் உயர்த்திய புருவம்.......

என் உதிரத்தையும் இறுக்குவது....
உன் இரண்டாவது ஆயுதம்....

முதல் ஆயுதம்
கண்ணும்;
மறு ஆயுதம் கண்ணீரும்....

கவிதை எழுதும் சுகம்
இரட்டிப்பாகின்றது;
கவிதையே உன்னை எழுதும் போது.........

Popular Posts

Blogger templates

Categories

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்