எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜுடன் சந்திப்பு
சமீபத்தில் சிங்கையில் இருந்து வேலை நிமித்தமாக மலேசிய வந்திருந்த எழுத்தாளரும் அண்ணனுமான சித்துராஜ் பொன்ராஜ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பார்க்க வாய்ப்பு கிடைக்கும் எழுத்தாளர்களை முடிந்தவரை நான் தவறவிடுவதில்லை. பிரிக்பீல்ட்ஸில் சந்திக்க முடிவெடுத்தோம்.
எழுத்தாளரைச் சந்திக்க நம்மூர் எழுத்தாளர்களையும் அழைத்துச் சென்றேன். எழுத்தாளர் ஸ்ரீகாந்தனும் எழுத்தாளர் பிருத்விராஜூம் வந்திருந்தார்கள்.
இரவு வரை பேசினோம். எங்கள் உரையாடல் இலக்கியம் குறித்தே அமைந்திருந்தது. என்னிடம் இருந்த சித்துராஜ் புத்தகங்களை எடுத்துச் சென்றிருந்தேன். அவரிடம் கையொப்பம் வாங்கி கொண்டேன்.. நான் எழுதிய புத்தகங்களை அவருக்கு கொடுத்தேன். என் புத்தகங்களின் ஒன்றை இவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன் குறுங்கதைகளை முகநூலில் எழுதி பகிர்ந்த சமயங்களின் குறிப்பிட்ட சிலரே அதனை கவனித்தார்கள் பின்னரே அது பெரிய வாசக பரப்பை அடைந்தது.
நான் குறுங்கதைகளை எழுதி பகிர்ந்த ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து என் கதைகளை வாசித்து அவரின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது வலைப்பக்கத்திலும் என் கதைகளைக் குறித்து அறிமுக கட்டுரையை எழுதியிருந்தார்.
குறுங்கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கும் சமயத்தில் அவரிடமே முன்னுரையைக் கேட்டிருந்தேன். மீண்டும் ஒருமுறை என் குறுங்கதைகளை வாசித்து நல்லதொரு கட்டுரையாகவே எழுதி கொடுத்திருந்தார்.
இளம் படைப்பாளிக்கு அவர் கொடுத்த ஊக்கம், குறுங்கதைகள் மீதான என் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
இப்போதுதான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகங்களை அவரிடம் கொடுத்தேன்.
எங்கள் உரையாடலும் , இலக்கியம் மீதான எங்கள் கருத்துகளும் எங்களின் அன்றைய பொழுதை பயனுள்ளதாக்கியது.
எழுத்தாளர் பிருத்விராஜு, எங்களை அழகாய்ப் படம் பிடித்திருந்தார்.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக