பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 31, 2024

2025 புத்தாண்டு

 ஒவ்வொரு ஆண்டும் நமக்கான படிப்பினையையும் அனுபவங்களையும் கொடுப்பதில் குறை வைப்பதில்லை. ஜனவரி எடுத்து வைக்கும் செல்ஃபிக்கும் டிசம்பரில் எடுத்தும் வைக்கும் செல்ஃபிக்குமே பல வித்தியாசங்கள் இருக்கும் பொழுது வேறென்ன சொல்ல முடியும்.நான் எப்போதும் என்னை ஓர் எழுத்தாளனாகவே முன்னிறுத்த விரும்புகிறேன். விரும்புவதோடு...

ஜனவரி முதல் நாளும் முதல் புத்தகமும்

 இங்கு வாழ்க்கை யாருக்கும் அவ்வளவு சுமூகமாக இருப்பதில்லை. அவரவர் தகுதிக்கு ஏற்றபடி அவரவர்க்கு ஏதோ ஒரு சிக்கலோ தொல்லையோ இருக்கத்தான் செய்கிறது. பாருங்களேன், அது கூட தகுதி பார்த்துதான் வருகிறது.வாசிப்பதும் அப்படித்தான். ஒரு சமயத்தில் கையில் பணமிருக்காது. ஆனால் எப்படியோ சில புத்தகங்களையாவது வாங்கி...

டிசம்பர் 29, 2024

தீரா காதல்

 ஒரு நீண்ட கவிதையாரோ ஒருவரால் நினைக்கப்பட்டுயாரோ ஒருவரால்தொடங்கப்பட்டுயாரோ ஒருவரால்வாசிக்கப்பட்டுரசித்துசிரித்துஅழுதுபுலம்பிஆறுதல் தேடிதோள் தட்டிகண்ணீர் துடைத்துமீண்டெழுந்து பின்யாரோ ஒருவரால் தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டேஇருக்கிறதுஇவ்வுலகில் எண்களுக்குவேண்டுமெனில்முடிவின்மை இருக்கலாம்ஆனால்எவ்வுலகிலும்...

டிசம்பர் 26, 2024

50வது கலந்துரையாடல்

இந்த வார திங்கட்கிழமையுடன் (23/12/24) இதுவரை நாம் நடத்திவந்த ‘சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடல்’ நிறைவடைகிறது.இது நமது ஐம்பதாவது கலந்துரையாடல் கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் பரிட்ச்சார்த்த முயற்சியில் தொடங்கி இவ்வாண்டு வரை  (2024) ஐம்பது கலந்துரையாடல்கள் வரை கடந்துவிட்டோம். உண்மையில்...

டிசம்பர் 22, 2024

பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு

   சமீபத்தில் நடந்த பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன். நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை சார்பாக புத்தகங்களை விற்பனை செய்யும் வாய்ப்பினைக் கொடுத்திருந்தார்கள். என்னுடன் மேலும் சில மலேசிய எழுத்தாளர்களும் அவர்களின் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள். ...

டிசம்பர் 18, 2024

- பிரபலமற்ற வாசகன் -

  - பிரபலமற்ற வாசகன் - உங்கள் புத்தகங்கள் பிரபலமானவர்கள் கைகளில் இருக்க வேண்டும்.உங்கள் புத்தகங்களைப் பிரபலமானவர்கள் பேச வேண்டும்.உங்கள் புத்தகங்களுடன்பிரபலமானவர்கள் படம் பிடிக்க வேண்டும்.உங்கள் புத்தகங்களுக்குபிரபலமானவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.உங்கள் புத்தகங்களைபிரபலமானவர்கள்...

நவம்பர் 14, 2024

சிறுகதை ஒரு பார்வை - பள்ளிக்கூட நிகழ்ச்சி

 ஹோப்புள் தோட்டத்தமிழ்ப்பள்ளியில் கோலாசிலாங்கூர் மாவட்ட தமிழ்மொழி பாடாட் குழுவின் ஏற்பாட்டில் ‘சிறுகதை ஒரு பார்வை’ என்னும் சிறுகதை பட்டறையை (கலந்துரையாடலை) ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் பட்டறையை  வழி நடத்தினேன்.ஆசிரியர்  ரூபன் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்தார். ஹோப்புள் தோட்டத்தமிழ்ப்பள்ளி...

நவம்பர் 11, 2024

ஆச்சரியங்களுக்கு இனி அனுமதியில்லை

 ஆச்சரியங்களைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருப்பதுதான் இப்போதெல்லாம் ஆச்சரியமாகத் தெரிகிறது ! வயதாகிவிட்டதா? இல்லை பார்த்திருந்த ஆச்சரியங்கள் எல்லாம் வலியாகிவிட்டதால்... #தயாஜி...

நவம்பர் 10, 2024

- ஃ -

அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்கிறோம் அவர்களின் எல்லா செயல்களுக்கும் நாம் பதில் சொல்கிறோம் அவர்களின் எல்லா வாக்குறுதிகளுக்கும் நாம் பதில் சொல்கிறோம் அவர்களின் தோற்கும் தருவாயில் " உன் மாத சம்பளம் எவ்வளவு? " என கேட்கிறார்கள் நம்மால் பதில் சொல்ல முடிவதில்லை நாம் தோற்கிறோமாம். அவர்கள்...

நவம்பர் 05, 2024

வாழ்வோம் தொலைவோம்

 உறவுகளில் உறவாடுவது அவ்வளவு எளிதல்லஉறவுகளால் உயிர்வாடுவதுஅத்தனை புதிதல்லமெல்லமெல்லஎதுவொன்றும் நம்மை கொல்லத்தான் செய்யும்உடனே சாகும் வரம்எல்லோருக்குமே கிடைப்பதில்லைமறக்கக்கூடாதவற்றில் சிலர் ஆடுகிறார்கள்கொண்டாடுகிறார்கள்மறக்க முடியாமலேயேசிலர் வாடுகிறார்கள்திண்டாடுகிறார்கள்நாமுமேமெல்லமெல்லசோகத்தில்...

அக்டோபர் 26, 2024

மங்கள தீபாவளி - வானொலி நாடகம்

வணக்கம் நண்பர்களே, தீபாவளி வாரத்தை முன்னிட்டு 'மங்கள தீபாவளி' என்னும் வானொலி நாடகத்தை எழுதியுள்ளேன்.காயத்ரி கண்ணம்மாவின் தயாரிப்பில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) இரவு மணி 7.30க்கு  மின்னல் பண்பலையில் நீங்கள் கேட்டு இரசிக்கலாம். தீபாவளிக்கு வீட்டுக்கு வரவேண்டிய நாயகனையும் நாயகியையும் காணவில்லை!...

அக்டோபர் 14, 2024

குழந்தைகளைக் கேட்கும் கதைகள்

 இம்முறை மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றிருந்தோம். அங்குள்ள மாணவர்களுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகம் எற்பாடு செய்திருந்தது. சனிக்கிழமை காலை 9க்கு தொடங்கிய கதை சொல்லும் அங்கம் பிற்பகல் மணி 12க்கு நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் ம.நவீன், இளம் எழுத்தாளர் அரவின், எழுத்தாளர்...

அக்டோபர் 10, 2024

எஸ்.ராவுடன் சந்திப்பு - 2

இவ்வாண்டு செப்டம்பரிலும் அக்டோபரிலும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மலேசியாவில் சில இடங்களில் உரை நிகழ்த்தினார். அதில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருந்தேன். அதிலொரு நிகழ்ச்சியைக் குறித்து முன்னமே எனது வலைப்பூவில் எழுதியிருந்தேன். இரண்டாவது நிகழ்ச்சி குறித்த அனுபவத்தை இதில் எழுதுகிறேன்.இந்த இரண்டாவது...

அக்டோபர் 09, 2024

எஸ்.ராவுடன் சந்திப்பு 1 (2024)

என் தொடர் வாசிப்பிற்கு எழுத்தாளர் எஸ்.ராவின் பங்கு மிக முக்கியமானது. தொடக்க கால வாசிப்பில் ‘என்ன வாசிக்கலாம்?’ என்கிற அடிப்படை சிக்கலை எதிர்க்கொள்ள எஸ்.ராவின் எழுத்துகள் பெரிதும் உதவின. பல படைப்புகளை அறிமுகமும் செய்தன.அவர் எழுதுகிறார் நான் வாசிக்கிறேன் என்பதைத்தாண்டி; எனக்காக அவர் என்ன சொல்லியிருக்கிறார்...

அக்டோபர் 07, 2024

வாசிப்பின் கொண்டாட்டம் 2

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை வாசித்த புத்தகங்கள் பற்றி 'வாசிப்பின் கொண்டாட்டம்' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.ஜூலை முதல் செப்டம்பர் வரை வாசித்தவற்றை குறித்து இந்தப் பதிவை எழுதுகிறேன். இவ்வாண்டு முடிய இன்னும் மூன்று மாதங்களே இருக்க, அடுத்து வாசிக்க வேண்டியதின் மீது கூடுதல் கவனம் கொடுப்பதற்கு இந்தப்...

வாசகசாலையின் 100வது இதழ்

 வணக்கம் நண்பர்களே,வாசகசாலை தனது 100வது இணைய இதழை வெளியிட்டுள்ளது. நீண்ட பயணமும் அர்த்தமுள்ள செயலூக்கமும் கொண்ட வாசகசாலை நண்பர்களுக்கு என் அன்பு.இந்த 100வது இதழில் பலர்  எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். அதில் இளம் படைப்பாளிகளும் அடக்கம்.இந்த இதழில் நான் உட்பட மலேசியாவில் இருந்து 6 பேரின் படைப்புகள்...

செப்டம்பர் 24, 2024

- நம்பிக்கையைச் சுமக்கும் கால்கள் -

 நான் ஓர் எழுத்தாளன்,  புத்தக விற்பனையாளன். இன்றைய சூழலில் அது மட்டுமே ஒரு குடும்பத்தைச் சுமக்க போதுமானதாக இல்லை.  ஆகவே வேலை தேடியும் சில இடங்களுக்கு சென்று வருகிறேன். தெரிந்தவர்களுக்கு 'ரெசிமிகளை' அனுப்பி வருகிறேன். சிலர் காரணம் சொன்னார்கள். சிலர் இரண்டாம் முறையில் இருந்து என் அழைப்பை...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்