கதைவாசிப்பு 2022_1 - ஜெயமோகனின் 'வேதாளம்'
இவ்வாண்டின் முதல் சிறுகதையாக வல்லினம்.காமில் வந்திருந்த ‘வேதாளம்’ கதையை வாசித்தேன். வாசித்து முடிக்கவும், அவ்வேதாளம் என்னிடம் தொற்றிக்கொண்டதொரு உணர்வு.
அபத்த நகைச்சுவையாக தொடர்ந்த கதை, அதன் முடிவில் கொடுத்திருக்கும் அதிர்ச்சியைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.
வலது கையின் அழகையும் அதன் வடிவையும் காட்டியவாரே நாம் அசந்த நேரம் இடது கையால் சட்டென நம் கையைத் தட்டிவிட்ட போன்ற உணர்வு.
காவல் நிலையத்தில் இருக்கும் கைதி தாணூலிங்கத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பு காண்ஸ்டபல் சடாட்சரம் கைக்கு வருகிறது. கைதியுடன் பேருத்து நிறுத்தத்திற்கு செல்கிறார்கள். அதற்கு முன் டீ கடைக்கு செல்லவும் இன்று பேருந்து வராது என தெரிந்ததும் வேறு வழியின்றி அடுத்த நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும்.
அதற்கு ஆறு கிழோ மீட்டர் நடக்க வேண்டும். பாதி வழி நடந்ததும் ஏற்படும் அசம்பாவிதம் நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது.
கதைகளுக்கு வசனம் எவ்வளவும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இக்கதை வழி அறிய முடிகிறது. இக்கதையில் காண்ஸ்டபிலுக்கும் திருடனுக்கும் இடையே நடக்கும் உரையாடலை சிரிக்காமல் கடக்க முடியவில்லை.
இந்த சிரிப்புத்தான் கதை முடிவில் நமக்கு வலியாக மாறி விளையாட்டு காட்டுகிறது.
“சின்னப்பிள்ளைகள் தூக்கச்சொல்லி செல்லமாக க்கூப்பிடுவதுபோல அதன் கை தூக்கப்பட்டிருந்தது.” என்ற வாக்கியத்தை வாசித்ததும் ஏனோ குற்றவுணர்ச்சி நம்மையும் பிடித்துக் கொள்கிறது
.
-இக்கதை இதழ் 133 – ஜனவரி 2022-ல் வெளிவந்துள்ளது.
(https://vallinam.com.my/version2/?p=8119)
0 comments:
கருத்துரையிடுக