பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 30, 2020

உன் வெளிப்பாடுதான் உன் மொழி

    நண்பர்கள் தொடர்ந்து zoom மூலமாக முக்கியமான சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறார்கள். நான்காவது நிகழ்ச்சியாக, தோழர் லீனா மணிமேகலையுடனான சந்திப்பாக அமைந்திருந்தது.   முன்னமே தோழர் லீனா மணிமேகலை எனக்கு பழக்கம். அவரை கவிஞராகவும் இயக்குனராகவும் அறிந்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்...

மே 28, 2020

100-வது பதிவு

         எனது வலைப்பூவில் இவ்வாண்டு தொடங்கி எழுதிய பதிவுகளில் இது 100வது பதிவு. கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத எண்ணிக்கை. இதில் அப்படியென்ன இருக்கிறது என்கிற கேள்வியும் சந்தேகமும் உங்களுக்கு மட்டுமின்றி எனக்கும் இருக்கவே செய்கிறது. அதனையே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.       ...

மே 27, 2020

வெறும் நாய்தான்...

   தீ வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. மின்சார கம்பிகள் வெடித்தன. பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஏதோ சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள். தீயணைப்புப் படையினர்க்கு அழைத்தார்கள்.   ஆயினும் காத்திருக்கக் கூடாது என்பதை புரிந்திருந்தார்கள். வெளியில் சென்றிருந்த மேரிக்கு அழைத்தார்கள்....

மே 25, 2020

BMW-வும் Viva காரும்

  காலையிலேயே கடனைக் கட்டச் சொல்லி குறுஞ்செய்தி வந்திருந்தது.  வரிசையாக நான்கு நாட்களாக வந்துக் கொண்டிருப்பதுதான். அதற்காகவே தயாரானவன் போல வேகமாக கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.   கேசவனுக்கு ஊரைச் சுற்றி கடன். இப்போதைக்கு பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இல்லை. என்ன செய்வது...

Children of Heaven

       இந்த நேரத்தில் இதனை பார்த்திருக்க கூடாது. மனதை கலங்கடித்துவிட்டது. உண்மையில் அவர்கள் சொர்க்கத்தின் குழந்தைகள்தான். அந்த சிறுவனின் கண்களில்தான் எத்தனை வலி. அவனது தங்கையில் முகத்தில்தான் எத்தனை கேள்விகள்.        காணாமல் போவது அவர்களது காலணி மட்டுமல்ல....

இரத்தக்கறை..... (Sharing is killing)

   மிகவும் அசந்துவிட்டான். கண்கள் கலங்கி இருந்தன. தலை முடிகலெல்லாம் எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தன. கால்கள் நடந்து நடந்து பலமிழந்துவிட்டன. தூக்க கலக்கத்தில் கண்கள் சொருகியது. கலங்கிய கண்களில்  இருந்து கண்ணீர்தான் வழிந்ததேத் தவிர தூக்கம் வருவதற்கு வழியில்லை.  தன்னைச் சுற்றிலும்...

மே 23, 2020

அனாதை

   ரேணுகா தனியாய் இருந்தாள். அவளுக்கு அம்மாவின் மீது அத்தனைக் கோவம். ஏன் இந்த அவசரம். "இப்படி அனாதையாய் விட்டுப்போகவா பெத்துப்போட்டாய்", என அவள் மனம் கொதித்தது. யார் யாரோ அழுதார்கள். ஆனால் அவளுக்கு அழுகை வரவேயில்லை. அம்மா தன்னை அனாதையாக்கி இப்படி ஒரு துரோகம் செய்துவிட்டதை அவளால் ஜீரணிக்கவே...

மே 20, 2020

உன் கதைதான் என் கதையும்

   ராகவனுக்கு ஒரே துள்ளல். தனது மானசீக ஆசான் வீட்டு முகவரி கிடைத்துவிட்டது. எத்தனை நாள் அவரின் எழுத்துகளில் தன் தூக்கம் தொலைத்திருக்கிறான். நண்பகளின் பார்வையில் ஒன்றுமில்லாத கதைகளில் கூட அவனால் பல படிமங்களை கண்டுபிடிக்க முடிந்தது. அதுமட்டுமல்ல, கண்டுபிடிப்புகளை பல அடுக்குகளாக அடுக்கி ஒவ்வொன்றுக்கு....

மாயங்களின் அரசன்

   வாசிப்பது எஸ்.ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்'. அதில் கோணங்கி பற்றிய தன் அனுபவத்தை 'கோணங்கி:மாயக்கதையாளன்' என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.   கோணங்கியுடன் ஏற்பட்ட சந்திப்பு. இருவரும் சேர்ந்து பயணம் மேற்கொண்ட விபரங்கள். அவரின் இயல்பு என மிக நேர்த்தியாகச் சொல்லிச்செல்கிறார் கோணங்கி...

மே 19, 2020

அடங்கா நினைவு

     எஸ்.ராவின் 'வாசக பர்வம்' வாசித்துக் கொண்டிருக்கிறேன். 'அடங்க மறுக்கும் நினைவு' என்ற தலைப்பில் ப.சிங்காரம் குறித்த தன் அனுபவத்தை எழுதிதுள்ளார். புத்தகத்தில் நான் முதலில் படித்தது இந்த கட்டுரையைத்தான்.      வாசித்து முடிக்கையில் மனதில் துக்கம் தொற்றிக்கொண்டது. காலத்தால்...

மே 10, 2020

அன்பின் தாய்மொழி

நான் அதிகம் பொய்யாய் சிரித்தது அம்மாவிடம்தான்ஒவ்வொரு முறையும்அதில் தோல்வி மட்டுமே எனக்கு எஞ்சியதுநான் அதிகம் என்னை மறைத்துக் கொண்டதுஅம்மாவிடம்தான்ஒவ்வொரு முறையும்ஓயாது என்னை தேடிக்கண்டடைந்துவிடுவார்பிள்ளைகளின் புன்னகை மனதில் இருந்துவருகிறதாரணத்தில் இருந்துவருகிறதாஎன அம்மாக்களின்...

மே 08, 2020

தாத்தாவின் இளமை

"கிழவனுக்கு வந்த வாழ்வை பார்த்தியா..?"  என்றுதான் அந்த இளைஞர்களில் ஒருவன் ஆரம்பித்தான். கேலியும் கிண்டலும் சத்தமின்றி இருந்தது. ஆனாலும் இரண்டாவது நாற்காலிவரை கேட்கவேச் செய்தது..    கடைக்காருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாசூக்காக இளைஞர்களிடம் எதையோச் சொல்லிவிட்டி அவரின் வேலையைப்...

நித்தியாவின் ஓவியம்

       ஆடம்பர வீடு. அழகான குடும்பம். வீட்டு வாசலில் உயர் ரக நாய். இரண்டு கார்கள். வீட்டு வாசலில் ஒரு காரும், வெளி வாசலில் ஒரு காரும் இருக்கும்.   வீட்டில். நித்தியா வரைந்துக் கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு கணினியில் உலக நண்பர்களுக்கு 'ஹாய்' 'பாய்' அடித்துக்...

மே 07, 2020

பசித்திருக்கும் மனது..

   குமாரை எனக்கு நன்றாகத் தெரியும். குமாராகவும் தெரியும் குண்டு குமாராகவும் தெரியும். சின்ன வயதில் இருந்து ஒன்றாய் படித்தோம். குமாருக்கு சாப்பிடுவது என்றால் வை. நல்ல சாப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு புத்தகமே எழுதிக் கொடுப்பான். அதனாலேயே ஒல்லிபிச்சானாக இருந்தவன் ஊதி...

உன்னோட பொம்மி

அப்பா, நீ எப்படி இருக்கநல்லாருக்கயாநான் இங்க இருக்கறது உனக்கு தெரியுமா இல்லையான்னு எனக்கு தெரியலஆனால் என்னை நீ கட்டியணைச்சு சந்தோசப்படப்போற அந்த நாளுக்காக நான் ரொம்ப ஆவலா காத்துகிட்டுஇருக்கேன்இப்போ நான் ரொம்ப ரொம்ப குட்டியாதான் இருக்கேன்அதனால நான்...

மே 06, 2020

முகத்தை காட்டுவீங்களா..?

   லிங்கேஸ்வரன் இன்று கோவமாக இருந்தார். எப்போதுதான் கோவம் வரவில்லை என அவருக்கேக்கூட தெரியாது. சமயங்களில் கோவம்தான் நமது பாதுகாப்புக் கவசம். அது இருக்கிற வரையில் நாம் பாதுகாப்பாக இருப்போம்.   வாங்க வேண்டிய எல்லாம் வாங்கியிருந்தார். மீண்டும் ஒரு முறை சரி பார்க்க வேண்டும். ஏனெனில் இன்றைய...

மே 03, 2020

அன்பின் மாற்று வன்முறையல்ல...

3மே2020 தமிழ் மலர் ஞாயிறு பதிப்பு   வணக்கம். நலமா? தொடர்ந்து என் எழுத்துகளை வாசித்து அவ்வபோது என்னை அழைத்து கருத்துகளை பறிமாறுவற்கு நன்றி. நான் எழுதியவை பலருக்கு அவர்களில் நினைவுகளை மீட்டெடுத்ததாக சொல்லியிருந்தீர்கள். சிலர் அவர்களின் அனுபவத்தையும் என்னிடம் பகிர்ந்து என்னை எழுத சொன்னீர்கள்....

மே 01, 2020

உனக்கு எங்க வலிக்குது...?

  என்றாவது மகன் திருந்துவான். அப்படித்தான் அம்மா நினைத்துக் கொண்டிருந்தார். நினைத்தது மட்டுமல்ல. நினைத்து நினைத்து பிரார்த்திப்பதும் அதைத்தான். கணவனை இழந்த வீட்டில் எஞ்சி இருப்பது மகன் மட்டும்தான்.  அவனையும் இழக்க அம்மா விரும்பவில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால் அவன், அப்பாவைப் போலவே...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்