பிம்பங்கள்....

அவளை அவ்வளவு சீக்கிரத்தில் நான் மறக்கவில்லை. எப்படி மறப்பது..? அவளால் ஏற்பட்ட வலிதான் இன்னமும் இருக்கிறதே. அதற்கான காரணக் காரியங்களைப் பற்றி இப்போ பேச வேண்டாம். அதற்கான நேரம் இதுவல்ல.ஏன் , இந்த பேருந்து நிலையத்தில் அவள். அதும் குடைகூட இல்லாமல். இவ்வளவு சோர்வா..? என்னை அறியாமலே அவள் அருகில் சென்றேன்....