பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2009

நண்பனுக்கு ஒரு கடிதம்.....




அன்புள்ள நண்பனுக்கு,
நலமா..........??


இக்கடிதம் ஒரு வேலை,
இன்று அவசியம் அற்றதாய்,
இருக்கலாம்...
ஆனால் இதன் தேவை,
தொலைவில் இல்லை.....


நண்பா,!
நீ வெற்றி பெறுகின்றாய்
என் வாழ்த்துகள்,
உன் வெற்றிக்கு உன்னைக் காட்டிலும் உழைத்தவன்
"நான்"
என்பதை மறந்துவிட்டாயே.........


உன் திறமைகளை வெளிகொண்ர,
என் வேலைகளை நிராகரித்தேன்,
அது என் தவறுதான்
என்ன செய்வது....??

படியாய்....ஏணிப் பாடியாய்
நான் மாறி உன்னை ஏற்றினேன்
மேலே ஏறியதும் எனக்கு கைக்கொடுக்காமல்

''ஏறிவிட்டேன்''

என,
இரு கைகளையும் மேலே
உயர்த்திவிட்டாயே....!!!

சேர்ந்தே நாம் பல
சாதனை செய்திருந்தாலும்....
இது நாம் பிரியவேண்டிய கட்டாயம்....
பிரிவு..!!
இயற்கையாய் ஏற்பட்டதோ, நமது
செயற்கையாய் ஏற்பட்டதோ..??

என யோசிப்பது அநாவசியம்....

என் முடிவுதான் ,
இருந்தும் உன் நன்மைக்கும் சேர்த்துதான்....
இருவர் திறமையிலும்
வித்தியாசம் உண்டு..
நான் பயனாவேன்.......
நீயும் பயனாவாய்...


புரியாவிட்டால் பரவாயில்லை
தெரியக்கூடவா இல்லை
உனக்கு ?

இனி நம் பயணத்தை
இரண்டாக்குவோம்....!!
நீ தனியாய் செல்
நானும் இனி தனியாய்

தனித்தன்மையை வளர்க்க...
நம் நட்பை பலி கொடுக்கவில்லை,
கொஞ்ச காலம்......
அடமானம் வைக்கின்றோம்....


ஓடும் குதிரையில்
முன் குதிரைக்குதான் மதிப்பு
குழுவுக்கு எந்த நாளும் கிடையாது,,,,,,


அலுவலகத்தில்,
என் எதிரில் நீ அமர்ந்தாலும்...
என் கண்ணுக்கு இனி தெரியப் போவது..
என் பாதையும்
என் பயணமும்....


உன் வாய்ப்பைக் காட்டி மகிழும்
உனக்கு
என் தோல்விகள்
புரியாத போது ...!


இந்த கடிதம் மட்டும்
எப்படி புரியும்... நண்பனே.....?

எங்கோ படித்தேன்

"நானும் அவனும் நகமும் சதையும்தான் வெட்டி விட்டான் என் வளர்ச்சி பிடிக்காமல்"


நம்மில் யார் நகம்
நம்மில் யார் சதை....


இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா

Related Posts:

  • ஊஞ்சலாட்டம்   முதலில் அவள் நம்பவில்லை. அவன் அதை எதிர்ப்பார்க்கவும் இல்லை.  பள்ளியில் இந்த கதையைச் சொன்னபோது எல்லோரும்தான் சிரித்தார்கள். &nbs… Read More
  • வாங்க... வாங்க...   ராணி இனி வரமாட்டாள். ராஜனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.  ஆனாலும் அவனால் அழாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் அவனுக்கு ஆறுதலைச் ச… Read More
  • சீ.முத்துசாமியின் 'மண்புழுக்கள்' சீ.முத்துசாமியின் மண்புழுக்கள் (மலேசிய) நாவல் குறித்து.. வழக்கமாக நம் நாட்டு படைப்பாளிகளால்  எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட… Read More
  • பின் தொடரும் பிசாசு...    மூன்று முறை குளித்தாள். இருந்தும் அந்த மையை அவளால் அழிக்க முடியவில்லை. நேற்று இரவு. இரண்டு மணி இருக்கும். அவளுக்கு தூக்கிவாரி… Read More
  • பசித்திருக்கும் ஓநாய்கள்  இன்று பொம்மியின் முறை. பௌர்ணமியும் கூட. இன்றைய நாள் அதிக பசியெடுக்கும். அதற்குள்ளாகப் பாட்டி வீட்டை அடைந்துவிட வேண்டும்.   ஒத்தையடிப்… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்