வாசிப்பின் கொண்டாட்டம் 2
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை வாசித்த புத்தகங்கள் பற்றி 'வாசிப்பின் கொண்டாட்டம்' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை வாசித்தவற்றை குறித்து இந்தப் பதிவை எழுதுகிறேன். இவ்வாண்டு முடிய இன்னும் மூன்று மாதங்களே இருக்க, அடுத்து வாசிக்க வேண்டியதின் மீது கூடுதல் கவனம் கொடுப்பதற்கு இந்தப் பதிவு உதவும்.
எண்ணிக்கை என்பதை தாண்டி பல சிக்கல்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் புத்தகங்களை வாசிப்பது என்பதே நாம் தொடர்ந்து செயல்படுகின்றோம் என்பதை நமக்கே நாம் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துதானே.
நாவல்
1. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
2. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
கவிதைகள்
3. நீராலானது - மனுஷ்ய புத்திரன்
4. குஞ்ஞுண்ணி கவிதைகள் - பா.ஆனந்தகுமாரின் தமிழாக்கம்
5. நான்சென்ஸ் - நாச்சியாள் சுகந்தி
6. ஒரு இரவின் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது - முகுந்த நாகராஜன்
பிற
7. எப்போதும் வாழும் கோடை - மனுஷ்ய புத்திரன்
8. ஜென் கதைகள் - கி.அ.சச்சிதானந்தம்
9. கதை to திரைக்கதை - ஜா.தீபா
10. எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்
11. சின்னஞ்சிறு பழக்கங்கள் - Atomic Habits
12. The Art of Public Speaking - Dale Carnegie
இவ்வாண்டின் வாசிப்பு திட்டத்தில் மாதம் ஒரு நாவலை வாசித்தல் என்று முடிவெடுத்திருந்தேன். இஇதுவரை ஒன்பது நாவல்களை வாசித்து அதை சாத்தியப்படுத்தியும் வருகிறேன். ஒரு நாவலை வாசிக்கும் போது அதனை வாசித்து முடிக்கும் போதான மனநிலையை புரிந்து கொள்ளவே கொஞ்சம் நாளானது. இடையிடையில் இலகுவான வாசிப்பைக் கோரும் நாவல்களையும் இணைத்து வாசிப்பில் சிறு விளையாட்டையும் செய்ய வேண்டியிருந்தது. இதற்கிடையில் வாசிக்கும் உதிரி சிறுகதைகளைக்கு பெரிய பட்டியலே போடலாம்.
பெரிய இலக்கை அடைவதற்கு முன் சிறுசிறு இலக்குகளைக் கடப்பதும்; கடப்பாற்காகவே சிறுசிறு இலக்குகளை உருவாக்குவதும் ஒரு வகையில் விளையாட்டுதானே.
மீதமுள்ள மூன்று மாதங்களில் இப்பட்டியலில் இணையவுள்ள புத்தகங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளவும் வாசித்து புரிந்து கொள்ளவும் நானும்கூட ஆவலாகத்தான் இருக்கிறேன்.
1 comments:
சிறப்பு. தொடர்க.
கருத்துரையிடுக