- அவர் சிரிச்சா வேற மாறி... -
ஆனால் பாருங்கள் எந்தப் புகைப்படத்திலும் அவர் சிரிக்கவே மாட்டார். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் புகைப்படம் எடுப்போம். இன்னும் கிச்சுகிச்சு மூட்டிதான் சிரிக்க வைக்கவில்லை.
சில படங்களில் அவரது வலது பக்க உதடு கொஞ்சமாய் பின் நகர்ந்திருக்கும், அதுதான் அவரின் புகைப்பட சிரிப்பு என சுய சமாதானம் செய்து வந்தேன்.
இன்று கொஞ்சம் கராராகவே சிரிக்க வைக்க முயன்றேன். சிரித்தார். அழகாக இருந்தார். 'அப்படியே ஒரு புகைப்படம்' என்றேன். உடனே முகம் இறுக்கமாகத் தொடங்கியது.
சில புகைப்படங்களுக்கு பிறகு, அவரின் சிரித்த முகத்தை படம் பிடித்தேன்.
அவரின் சிரித்த முகம் ஏனோ இரட்டையாகத் தெரிகிறது. பக்கத்தில் இருக்கும் என் முகத்தில் எந்த தடுமாற்றமும் இல்லை. ஆனால் அவரின் சிரித்த முகம் மட்டும் ஏன் அப்படியாக இருக்கிறது என தெரியவில்லை.
ஒருவேளை அவர் சிரிக்கும் போது அவரின் உள்ளிருந்து வேறொரு ஆள் எட்டிப்பார்ப்பார் போல ! அந்த இன்னொரு மனிதனைத்தான் தன் சிரிப்பின் பின்னால் இவர் மறைத்து வைத்திருக்கிறாரோ என்னமோ...!
அதிர்ச்சியாகதான் இருக்கிறது. அதைவிட அதிர்ச்சியாய் இன்னொன்றும் உள்ளது. அது இன்று நாங்கள் சாப்பிட்ட பில்.. "அவ்வளவுக்காக சாப்டோம்...!"
0 comments:
கருத்துரையிடுக