குழந்தை கடத்தல்காரன்
குறுங்கதை 2021 - 1
- குழந்தை கடத்தல்காரன் -
"அங்க பாருங்க சார்.. பிள்ளை எவ்வளவு அழகா இருக்கு... அப்பனை பாருங்களேன்..."
நிமிர்ந்தேன். அவர் சொல்வது உண்மைதான். சிரித்துக் கொண்டேன். மீண்டும் சாப்பிட ஆரம்பித்தேன். அவரும் விடவில்லை. மீண்டும் ஆரம்பித்தார்.
"எனக்கு என்னமோ டவுட்டாவே இருக்கு சார்...?"
இப்போது எனக்கு சுருக்கென்றது.
"ஒரு வேளை பிள்ளையை கடத்திட்டு போறான் போல சார்...." என்றார்.
"பிள்ளை அழுகலையே சார்..!?" என்றேன்.
"அட என்ன சார்.. பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. இப்படி கேட்கறீங்க.. இப்பலாம் ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தாலே பிள்ளைங்க கூட வந்திடும் சார்..."
"இப்ப என்ன சார் பண்றது.?"
"வாங்க சார் போய் விசாரிப்போம்..."
எழுந்தோம். நடக்கலானோம். எங்களை அந்த நபர் கவனித்துவிட்டார். நகர ஆரம்பித்தார். நாங்கள் ஓடிச்சென்று பிடித்துவிட்டோம். முதல் வேளையாக அந்த குழந்தையை பிடுங்கி புதிய நண்பரின் கொடுத்தேன். சலசலப்பு ஏற்பட ஆட்கள் கூடினர்.
வந்தவர்களிடம் நடந்ததைச் சொன்னேன். உதவிக்கு நண்பரை தேடினேன். அவர் அங்கிருக்கவில்லை. அப்போ அவரிடம் கொடுத்த குழந்தை!!!!!
#தயாஜி
2 comments:
இறுதியில் நல்லதொரு திருப்பம். வாழ்வில் இப்படித்தான் நயவஞ்சக்கள் அருகிலிருந்தவாரே கண்னில் மண்ணை தூவிவிடுகின்றனர். ஒரு திருடனின் மனப்பாங்கை மற்றொரு திருடனே அறிவான் என்பதனையும் இக்கதை அழகுர சித்தரித்திருக்கின்றது. இப்போது அந்த படித்தவனின் நிலை ? படித்தவனை பகட்டு உலகம் விட்டுவிடுமா என்ன ...
நன்றி தோழர்.....
கருத்துரையிடுக