அப்பா கண்டிப்பானவர்தான் ஆனாலும்…
இன்னும் அந்த சாலையில் பரபரப்பு ஆரம்பமாகவில்லை. தனக்கே உரித்தான இயல்பில் அது அழகாகத் தெரிந்தது. காலை பனியில் அரைகுறை குளியல் போட்ட புற்களில் சில மட்டும்தான் தலையைத் துவட்டி நிமிர்ந்து நின்றன . சில ஏனோ பனித்துளி சுமந்த தலைகணத்தில் நிமிர்ந்துப்பார்க்க முடியாமல் தலைகுனிந்துக் கிடந்தன. தலைக்கணம் பனியால் சேர்ந்திருந்தாலும் அது பாராங்கல்லால் சேர்ந்திருந்தாலும் அதனை சுமந்துக் கொண்டு எப்படி நிமிர்ந்து...