கதை வாசிப்பு 9 - ‘நோர்பாவின் கல்’
இம்மாத உயிர்மை இதழில் (ஜூன் 2016) எஸ்.ரா எழுதிய 'நோர்பாவின் கல்' கதை
வாசித்தேன் . ஜென் பாணியில் தத்துவம் சார்ந்து கதையை எழுதியுள்ளார். தனது இறப்பு முன்னமாக தன்னிடம் கொடுத்திருந்த மூன்று பொருட்களை திரும்பக் கொடுத்துவிட நினைத்து நோர்பா புறப்படுவதில் இருந்து கதை ஆரம்பமாகிறது.
அவர் பயணத்தில் சந்திப்பதுதான் மீதி கதை. மடத்தில் இருப்பவர்கள் மட்டுமின்றி உழைப்பே பிரதானமாக இருப்பவர்களுக்கும் ஞானம் உண்டு என்பதை அறிய முடிகிறது. மூன்றாவதாக வைத்திருக்கும் கல்லை மீண்டும் அதே இடத்தில் வைப்பதில் வாய்ப்பில்லாமல் போகிறது. அவ்விடத்தை மனிதர்கள் முழுவதுமாய் மாற்றிவிட்டார்கள்.
அப்போது நோர்பாவின் மனதில் ஒன்று தோன்றுகிறது. "இயற்கையிடம் ஒன்றை ஒப்படைக்க தீர்மானித்துவிட்டால் ஆயிரம் வழிகள் இருக்கின்றன. நீ உன் வழியே தேர்வு ". அதன் படியே செய்கிறார் நோர்பா. கதை முடிகிறது.
நேர்த்தியாக கதை சொல்லப்பட்டுள்ளது.
சமீபமாக எஸ்.ரா இம்மாதிரி, ஜென் , தத்துவம் சார்ந்த கதைகளையே எழுதுவதாக படுகின்றது. ஒருவேளை அது அவரிம் அடுத்த புத்தகத்துக்கான முன்னெடுப்பாக இருக்கலாம்.
- தயாஜி
0 comments:
கருத்துரையிடுக