கதை வாசிப்பு 11 - 'உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருப்பது''
கதை வாசிப்பு 11 - 'உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருப்பது'
சிமமாண்டா என்கோஸி அடீச்சியின் சிறுகதை, 'உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருப்பது'. பிப்ரவரி மாத காலச்சுவடில் (2016)வெளிவந்துள்ளது. தமிழில் ஜி.குப்புசாமி .
அமேரிக்கா சென்று படிக்கும், பணி செய்யும் ஒருத்தியின் கதை. அவளின் அனுபவங்களையும் அவள் செய்ததையும் அவளிடமே சொல்லுவது தொடங்கி அதே பாணியில் கதை முடிவு பெறுகிறது.
பிறந்த இடத்திலிருந்து வேறொரு இடம் சென்றிருக்கும் வழக்கமான கதைதான் என்றாலும் கதை சொல்லிச்செல்லும் முறையும் சம்பவங்களும் மாறுபடுகின்றன.
அமேரிக்க மனோபாவத்தை இயல்பாக சொல்லிச்செல்கிறார் கதைச்சொல்லி. அவளுக்கு ஏற்படும் காதலை அவள் எதிர்கொள்ளும் விதம் முன்முடிவுகளை தகர்க்கிறது.
குடும்பத்திலிருந்து தன்னை அந்நியப்படுயிருந்தவளுக்கு தந்தையின் மரணம் அவளுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது . பிறந்தகம் செல்ல எத்தனிக்கிறாள்.
அவள் திரும்புவாளா மாட்டாளா என்ற கேள்வியுடன் அவளின் காதலனும் நாமும் விடைபெறுகிறோம்.
மீண்டும் வீடு திருப்புவதற்கான காரணங்களைக்கொண்டே கதைகளை முடிக்கும் சிமமாண்டா , நமது பூர்வீகத்தை நினைவுப்படுத்துவதில் தவறவில்லை.
0 comments:
கருத்துரையிடுக