மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறோம்..!
(12 ஜூலை 2013 அன்று க. பாக்கியம் ஏற்பாட்டில் ‘மலேசியத் தமிழிலக்கியத்தில்
பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வில் மலேசியத் தமிழ்
எழுத்தாளர் சங்க தலைவர் பெ. ராஜேந்திரன் அவர்களும் மலாயா பல்கலைக்கழக
இணைபேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள்
விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்தன. அதற்கான
எதிர்வினைகளை வல்லினம் இங்கே பதிவு செய்கிறது... http://vallinam.com.my/version2/ அதில் வெளி எனது கட்டுரையை இங்கே பதிகிறேன்)
மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறோம்..!
நேரடியாக விஷயத்துக்கு
வந்துவிடுகிறேன். மிக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்; இதுவரையில்
பெண்களுக்கு எழுத்தாளர் சங்கம் கொடுத்து வந்த மரியாதை, பரிசு ,
முக்கியத்துவமெல்லாம், அவர்களின் எழுத்துகளை படித்ததால்தான் என
நினைந்திருந்த அவர்களுக்கும் சரி, இன்னமும் எழுத்தாளர் சங்கத்தில் அதி
பயங்கரமாக உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் சரி… சரியாக புரிய
வைத்துவிட்டார் சங்கத்தலைவர். இதுவரையில், ‘கொடுத்தது’ எல்லாமே
கட்டாயத்தின் பெயரிலும், ஒரு பெண்ணுக்காவது பரிசு, கொடுக்கனுமே என்ற
ஆண்களின் பெருந்தன்மையாலும்தானாம். அதோடு, தான் தலைவரான பிறகு, பெண்களுக்கு
கண்டிப்பாக பரிசு கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருப்பதாக
மேடையிலே முழங்கிய எழுத்தாளர் சங்க தலைவரின் அந்த பேச்சி; பேச்சு என்பதை
விட ஆணாதிக்க சிந்தனை என்பதே சரி கண்டிக்கத்தக்கது.
எனது எதிர்வினையை அவருக்கு காட்டும்
வகையில் வரும் , ஞாயிறு நடைபெறவிருக்கும் சிறுகதை பரிசளிப்பு விழாவை நான்
புறக்கணிக்கிறேன். எனது சிறுகதையும் ஒரு கதையாக பரிசளிப்பு
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கென சன்மானமாக 250ட்டும் தரப்படும். RM
250.00 வெள்ளிக்காக சுரணையற்ற ஒருவனாய் பல்லைக் காட்டிக் கொண்டு முன்னே
போய் முகம் காட்ட எனக்கு உடன்பாடில்லை.
“நிகழ்ச்சியினை புறக்கணித்த பிறகு அவர்கள்
கொடுக்கும் கதைக்கான சண்மானத்தை மட்டும் ஏன் வாங்கிக் கொள்கிறீர்கள்…?”
எனும் கேள்வி கையாலாகாத திசையில் இருந்து என்னை நோக்கியும் , அவர்
பேச்சினால் நிகழ்ச்சியினை புறக்கணிக்கும் சிந்திக்கத் தெரிந்த இதர
எழுத்தாளர்களை நோக்கியும் வீசப்படலாம்.
சொல்லவேண்டியது ஒன்றுதான்;
எங்களை கதைகளை விற்று வியாபாரம்
செய்யபோகிறீர்கள். எங்கள் கதைகள் உங்கள் வசதிக்காக ஏதோ பெயரில்
புத்தகமாக்கப்படுகிறது. அது சம்பத்தப்பட்டவர்களுக்கு 10 வெள்ளியாகவும்.
மற்றவர்களுக்கு 30 வெள்ளியாகவும் விற்பக்கப்படவுள்ளது. நீங்கள்
பயன்படுத்திய எங்கள் கதைகளுக்கும் , எழுதிய எங்களுக்கும் தரவேண்டிய
‘copyright’. கதையை பயன்படுத்தி விற்கும் உங்களிடம் இருந்து எங்களுக்கான
உரிமம் வரவில்லையென்றால், நாங்கள் காவல் நிலையத்தில் கூட புகார் செய்யலாம்
அதுதான் உரிமம். துரதிஷ்டவசமாக இந்த உரிமம் குறித்து அவர்கள் அறிந்திருக்க
மாட்டார்கள். எழுத்தாளர்களுக்கும் இது குறித்து சங்கத்தின் மூலமோ அதன்
தலைவரின் மூலமோ கூட தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் தங்களின்
உழைப்பிற்கான ஊதியத்தை இப்படி அடுத்தவர் விளம்பரத்தில் பெற்றுக்கொள்ள
மாட்டார்கள். மேலும் எங்கள் கதையை நூலாக பிரசுரிக்க சங்கம் எங்களிடம்
அனுமதி பெறவில்லை. அனுமதி பெறாமல் நூலாகப் போட்டி அதை விற்று பணமாக்கும்
சுரண்டலை ஏற்க முடியாது. உள்ளே உள்ளது எங்கள் உழைப்பு.
தான் பலர் முன்னிலையில் மேடையில் பேசிய
ஆணாதிக்க சிந்தனையை திரும்ப பெறும்வரையிலும் அதற்காக மன்னிப்பு கேட்கும்
வரையில் இனி மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சி ஒவ்வொன்றும் தொடர்ந்து
புறக்கணிக்கப்படும். அதே மேடையில் எண்ணகூடிய வகையில் சில ஆண்கள்
இருந்தாலும், சில பெண் எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களின்
எதிர்வினை குறித்து இன்னும் வெளிவரவில்லை. அவர்களும் சரி அங்கிருந்த
மற்றவர்களும் சரி, தலைவரின் ஆணாதிக்க சிந்தனையோடு ஒத்துப்போகின்றார்கள்
அல்லது அடுத்தடுத்து சங்கத்தின் மூலமும் தன் தலைவரில் மூலமும் தங்களுக்கு
கிடைக்கப்போகும்; கிடைத்துக் கொண்டிருக்கும் சலுகைகளை இழக்க விரும்பவில்லை
.
அவரின் பேச்சு, ஒளிப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. இனி நான் சொல்லவில்லை கிள்ளவில்லை என்று அவராலும் அவரது
கூஜாக்களாலும் சொல்ல முடியாது. நாங்கள் செயல்படக்கூடியவர்கள். வெறுமே
எழுதாமலும் வாசிக்காமலும் இருக்கும் சில சங்க ஜால்ராக்கள் இல்லை.
இந்த எதிர்வினையைக் கூட செய்யவில்லையென்றால் “நானும் எழுதுகிறேன்” என சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை என்றே நினைக்கிறேன்.
தயாஜி....
0 comments:
கருத்துரையிடுக