பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 31, 2010

சிறுகதை (அடுத்தது நீ 2)

(வானொலி நாடகத்துக்காக எழுதியதை.. மீண்டும் பத்திரிகைக்காக எழுதிய போது இப்படிதான் இருந்தது என்ன... செய்ய...?)
அடுத்தது நீ...

முதல் நாள், யாரும் எதிர்ப்பார்க்கவில்லை இப்படி நடக்கும் என. இது அப்படி ஒன்றும் புதிதும் இல்லை வழக்கமானதுதான். அவளும் இதை அளவுக்கு அதிகமாய் பழகியிருந்தாள். ஆரம்பத்திலிருந்தே அவளால் எல்லாவற்றையும் சரியா…மிகச் சரியா யூகிப்பாள். ஆனால் அதை யாரிடமும் சொல்ல விரும்பமாட்டாள். அவளில் விருப்ப மறுப்புக்கு காரணம் உண்டு. அதற்கு முன் அவளுக்கு தேவை, அதிகம் பழக்கத்தில் உள்ள ஒருத்தியின் பெயர்.அதிக தேடாமல் என் தோழியின் பெயரையே வைக்கின்றேன். பிற்பகுதியில் உங்களை குழப்பப்போகும் நான் குழம்பாமல் இருக்க இப்படி ஒரு வசதி எனக்கு அவசியம்..!

தேவி.
அவளுக்கான பெயரை தெர்வுக்குழு (?) முடிவெடுத்துவிட்டது. இனி அவளின் ‘‘விருப்பமறுப்புக்கு’’ காரணம் சொல்லாமல் இரண்டு சம்பவங்களைச் சொல்கின்றேன்,இது அவளுக்கு தெரிய வேண்டாம். இருபது வயதை தாண்டிக்குதிக்கும்போது..! அவளின் வலது கை தளும்பு அவளின் பதினைந்து வயது அம்மாவை நினைவு கூர்ந்தது. இவளின் அப்பாவின் தோழி என வீட்டுக்கு வரத்தொடங்கிய ஒருத்தியால் அம்மாவுக்கு மரணம் ஏற்படப்போவதாகவும் அப்பாவும் இதற்கு உதவப்போகின்றார் என்று சொன்னதின் விளைவு. அப்பாவை ஆண்டவன் போல நம்பிய அப்பாவி அம்மா இவளிடம், அதைக் கேட்டதும் காளியாக மாறி ஆறா காயத்தை ஏற்படுத்தினால்.

இப்போது அவளுக்கு கிடைத்திருக்கும் மூன்று தோழிகளான கஸ்தூரி, சரஸ், சித்ரா இவர்களால் இவளின் யூகிக்கும் ஆற்றல் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டது. தேவி சொன்னார் போலவே விபத்துகள் நடந்தன....., சினிமா படங்கள் வெற்றியும் தோல்வியும் அடைந்தன...... வகுப்பிலும் பரிட்சைக்கு வரப்போகும் கேள்விகளையும் முன்குட்டியே யூகித்து அதைமட்டும் படித்து இவளும் இவளின் தோழிகளும் நல்ல புள்ளிகள் பெற்றனர்.

இவர்களில் “அலாவுதின்” தேவிக்கு வந்தது ஆபத்து.அது யூகிக்கும் சக்தி இல்லை. அபூர்வ சக்தி..! என அவள் தெரிந்துக் கொண்ட அந்த நள்ளிரவு நேரத்தில்.

வழக்கமான நிகழ்வில் வழக்கத்திற்கு மாறாக நடக்கப்போகும் சம்பவம் தேவிக்கு தெரிந்ததோ என்னமோ..? அவள்.....

“என்னடி உங்களுக்கு தெரியாதா.. இன்னுமா நம்பிக்கை வரல..?”
“நம்பிக்கை இல்லாமலில்லை.. சும்மாதான் பார்ப்போமே, நீதானே சொன்ன இது யூகிக்கும் சக்தி இல்லை ஏதோ.......”
என சரஸ் முடிக்கும் முன்பு , சித்ராவும் கஸ்தூரியும்
“அபூர்வ சக்தி...!”
என ஒருசேர கோஷம் போட்டனர்.
“உங்களுக்கு இது ஒரு விளையாட்டா இருக்கா...? இந்த அபூர்வ சக்தியால நான் படும் கஷ்டம் எனக்குதானே தெரியும் அந்த வயசில அம்மா வைச்ச தழும்பு முதல் இப்பவரைக்கும்”
இவ்வாரு பேசிய தேவி சமையல் அறையிலிருந்து வரவேற்பறைக்கு நடக்க, தோழிகள் மூவறும் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.
தேவியை அவ்வப்போது இயக்கிய அந்த அபூர்வ சக்தி இன்று தன்னை முழுமையாக வெளிப்படுத்தபோவது தெரிந்திருந்தால், மூவறும் தேவியை பின் தொடர்ந்திருக்கமாட்டார்கள் போலும்.


................................................................................................................

வரவேற்பறையில், அபூர்வ சக்தியால் தேவிக்கு அப்படி என்னதான் கஷ்டம் என கேட்க ஆரம்பித்தவர்கள் இந்த சக்தியால் தாங்கள் பெற்ற நன்மைகள் பற்றியும் பேசப்பேச வினோதமாக இருட்ட ஆரம்பித்தது. வீட்டில் ‘மின்சாரத்தடை’ ஏற்பட விளக்குகள் ஒத்திகைப் பார்க்கத்தொடங்கியது மூவறுக்கும் உடல் ரோமக்கள் உணர்ச்சியைக் காட்டத்தொடங்கின. அந்நேரம்தான் அபூர்வ சக்தி தேவியை முழுமையாக ஆட்கொள்ள ஆரம்பித்தது.

இருக்கும் களேபரம் போததென்று, தேவியின் உடல் மின்சாரம் தாக்கப்பட்டது போல அதிர்ந்தது. கருவிழிகள் இருக்க வேண்டிய இடத்தை வெள்ளையாக ஏதோ ஒன்று நிறப்பிக்கிகொண்டிருப்பதை மூவறும் பார்க்காதவரை இதயத்துடிப்புக்கு வேலை இன்னும் அதிகரிக்காது.
நால்வரும் ஒரு மையப்புள்ளிக்கு வரத்தொடங்கினர். தேவி மட்டும் ஏனோ கஸ்தூரியில் அருகிள் வந்ததும் அவள் மிது மயங்கி விழுந்தால். விழுந்தது அவளா..?

அபூர்வசக்தியால் அவள் இன்னமும், மின்சாரத்தால் தாக்கப்பட்டவள் போல அதிர்ந்துக்கொண்டிடுந்தால்.
கஸ்தூரி தேவியை மடியில் படுக்கவைக்கவும் ,இதுவரை கண்ணாமூச்சி காட்டிய விளக்குகள் ஓய்வு பெற்றன. இருக்கும் அறைகுறை இருட்டு போதாதென்று இன்னும் இருட்டு, உரிமை எடுத்துக்கொண்டது.
சரஸ்,
“ பயப்படாதிங்க.. பயப்படாதிங்க.. ஒன்னுமில்லை கஸ்தூரி தலையை ஆட்டாமா புடிச்சிக்கோ. சித்ரா நான் போய் தண்ணி கொண்டுவறேன் நீயும் தேவி காலை கெட்டியா புடிச்சிக்கோ..”
என அவசர அவசரமாக சமையலறைக்கு சென்றாள்.

(சென்றாள் என்பது ‘இறந்த காலத்தைதானே’ குறிக்கும்..?)

கஸ்தூரி, தேவியின் தலையை ஆடாமல் பிடித்தாலும் அவளால் அதன் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, சித்ராவுக்கும் இதே நிலைதான். தண்ணீர் கொண்டுவர சென்ற சரஸ் இன்னும் வருவதாயில்லை.
“சரஸ்..சரஸ்”
இருவரும் ஒருசேர சத்தமாக அழைக்கவும், இதுவரை சுவரில் நல்ல பிள்ளையாக ‘இருத்தல்’ செய்த சுவர் கடிகாரம் கீழே விழுந்து உடைந்தது. தேவியின் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதை உணரத்தொடங்கினாள் கஸ்தூரி.
மீண்டும் பயந்த மொழியால்;
“சரஸ்..சரஸ்”
என கத்த, உள்ளிருந்தா இல்லை வெளியிருந்தா என யூகிக்க முடியாத இனம் கண்டுகொள்ளா ஒரு குரல் கேட்டது,
“அவ வரமாட்டா..! அவ வரமாட்டா...!”
சித்ரா,
“தேவி தேவி.. என்ன பேசற.. உனக்கு என்ன ஆச்சி.. ஐயோ கடவுளே..”
கஸ்தூரி,
“தேவி தேவி.. ”
என அவளை குலுக்கிய குலுக்கலில் அதிர்ஸ்டம் இல்லைதான். அவள் தெளியவில்லை.
சரஸின் குரல் கேட்பதாக சொல்லி, சித்ரா சமையலறைக்கு ஓடவும் சட்டென மின்னல் போல் தோன்றிய வெளிச்சத்தில் தேவியின் கண்ணை கவனித்தாள் கஸ்தூரி.
!!!!!!!
ஏது செய்வதென்று தெரியாத அவள் , மடியில் வைத்திருந்த தெவியை தன்னால் இயன்ற பலத்தைப் பயன்படுத்தி தள்ளிவிட்டு எழுந்தாள். இவளுக்காகவே திறக்கப்பட்டது போல் , வாசற்கதவு திறந்து, அழைத்தது. எங்கே.?


..........................................................................................................


நிலைமை இன்னும் மோசமாகப் போவதாக உணர்ந்து விட்டதால், கஸ்தூரி திறந்த கதவின் அழைப்பை ஏற்று வேளியில் ஓட தொடங்கினாள். அவளின் நினைவில் ஏனோ சரஸ்,சித்ரா அழிக்கப்பட்டிருந்தார்கள். ஓட்டம் எடுத்தவளுக்கு வழிகாட்ட அந்த கும்மிருட்டில் மின்னல் வெட்டத் தொடங்கியது மறுபடியும்.

வாசலை நெருங்க இன்னும் சில அடிகளே இருக்க கணிக்கமுடியாதா ஒரு தடுப்பு அவளில் காலை தடுக்கியது. விழுந்தவள் திரும்பிப் பார்க்கவும் மின்னலில் ஒத்துழைப்பிலும் அவளுக்கு தெரிந்தது ஒரு உருவம். அதும் ரத்தவெள்ளத்தில். கஸ்தூரியால் எதிர்ப்பார்க்கமுடியவில்லை..!
அவளா..அதுவா..?

.................................................................................................................

அலுவலக மதிய உணவு நேரம்.

“எங்க அது யாரு சொல்லு ..? ம்.. பவானி என்னமோ ரொம்ப பேசனையே கதையோட முடிவை சொல்லேன் பார்க்கறேன்..?”
மணியின் அலுவலக இடைவேளை கலாட்டா இது. புதிது புதிதாக கதை சொல்லும் இவன் முடிவை மட்டும் சொல்லாமல் குழப்புவான் இருந்தும் இவனது தோழி கோமதி முதல், தோழர்கள் பல பேர்வரை இதைத்தான் விரும்புவார்கள்.

“என்ன மணி நீ, எப்பவும் சொல்றமாதிரி இல்லாம ஏதோ அபூர்வ சக்தின்னு ஆரம்பிச்சி அங்கங்க கொஞ்சம் எங்களை குழப்பிவிட்டு இப்படி எங்களை கேக்கறது உனக்கே ஞாயமா இருக்கா சொல்லு..?”
என்று அதிகமாகவே அலுத்துக் கொண்டாள்.இவளே இபப்டியென்றால் மற்ற நண்பர்கள் கேட்கவா வேண்டும். எப்படியும் கதையின் முடிவை மணி சொல்லிவிடுவது இவர்களுக்கு தெரியும், இருந்தும் தாங்களும் தங்கள் திறமையைக் காட்டி கதையைத் தொடர்வார்கள். ஆனால் இந்த கதையின் முடிவை அவர்களால் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியவில்லையா..? சொல்ல விடவில்லையா.?

உணவு நேரம் முடிந்தது.

மதியம், வீட்டுக்குத் திரும்பும் சமையம், மணியின் மோட்டாரை வழிமறைத்து கோமதி,

“என்னடா நீ கதையை சொல்லமாலே போகப்போறயா..? எனக்கு தலையே வலிக்குது சொல்லுடா..? ”
“எதை சொல்லட்டும்”
“அந்த கதையின் முடிவையும் அப்பறம்...” முடிக்காமல் இழுத்தாள்.
“அப்பறம் ?”
“ம் அந்த மாதிரி அபூர்வ சக்தி ஏதும் உண்மையிலேயே இருக்கா. நீ சொல்றதைப் பார்த்தா உண்மை மாதிரி இருக்கு..!”
ஏதோ யோசித்தவாய் மணி,
“சொன்னா பயப் படமாட்டியே”
“சொல்லேன்”
“அந்த அபூர்வ சக்தி இருக்கு. அது எங்க இருக்கு தெரியுமா..?”
“எங்க மணி இருக்கு..”
“அதுகிட்டதான் பேசறே கோமதி”
“...!...”

மேற்கொண்டு பதில் எதும் சொல்லாமல் மோட்டாரில் புறப்பட்டான். இப்போதே இரவு மணி ஏழு, வீட்டிற்கு போவதற்குள் எட்டாகிவிடும்.
மோட்டாரில் பயணித்துக் கொண்டே எண்ணங்களின் பின்னால் பயணிக்கலானான்.
என்ன கதை இது. யார் அந்த தேவி. அது என்ன அபூர்வ சக்தி. இந்த மாதிரி கதையை நான் சொன்னதே இல்லையே. நினைச்சது கூட இல்லையே.அப்பறம் எனக்கு எப்படி இந்த கதையை சொல்லமுடிந்தது. அபூர்வ சக்தி..! .அபூர்வ சக்தி..! அப்படின்னா..?

குழப்பத்தில், தலையே வலித்தது மணிக்கு. இன்னமும் வீட்டுக்கு போக நேரமாகும், அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் தன்னையறியாமலே நிறுத்தி, யாருக்கோ காத்திருக்கத் தொடங்கினான்.
அபூர்வ சக்தி...அபூர்வ சக்தி... என மனதில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி சரிபார்த்தான். அவனது இருக்கையின் அருகில் பாட்டுச் சத்தம் கேட்க, கவனித்ததும் தெரிந்தது ஒலியும் ஒளியும் கூடிய கைபேசி. சுற்றிலும் பார்வையிட்டான் யாரும் தெரிவதாக இல்லை. கைபேசியை எடுத்து பேசத்தொடங்கினான்.
“ஹலோ..”
மறுமுனையில் பதட்டமாக,
“ஹ..ஹா..லோ யாரு பேசறா..? ”
“நான் மணி பேசறேன் நீங்க..?”
“இது..இது என்னோட போன் தான் . நான்தான் தொலைச்சிட்டேன். இப்போ எங்க இருக்கிங்க. சொல்லுங்க pls நானே வரேன்..”

மணிக்கு வேறு வழி தெரியவில்லை. இரவு மேலும் இருட்டத் தொடங்கியது.
“ம்..சரி சீக்கிரம் வாங்க செர்டாங் பேருந்து நிக்குமே அங்கதான் இருக்கேன்”
“ஓ அங்கயா.. அங்கதான் பஸ் ஏறினேன். சரிங்க என்னை வர சொல்லிட்டு நீங்க காணாபோயிட மாட்டிங்களே..?”
“இங்க பாருங்க, இது ஒன்னும் விலை அதிகமுல்ல போன் இல்லை. நான் எடுத்து வெளியே விக்கறதுக்கு...என்னுடைய போன் இதிவிட விலை அதிகம். வாங்க காட்டறேன்.”
“மன்னிச்சிடுங்க...மன்னிச்சிடுங்க.. இதோ இப்பவே வரேன்”
“வாங்க, ஆமா உங்கள் பேரு ”
“ம்.. என் பேரு தேவி”
தேவி......!!!
“தேவியா,...?”
மணியின் ஆச்சர்யத்திற்கு அர்த்தம் உள்ளது. தேவி, இவன் கதையில் வந்தவள்தானே.! அந்த கதையே எப்படி எழுதினேன் என குழம்பும் மணிக்கு இவளின் வருகை எதனைக் குறிக்கும்.அந்த அபூர்வ சக்தி இவளுக்குதானே இருந்ததாக மணி சொன்னால்.

மணி, தன் கைகடிகாரத்தைப் பார்த்தான் இரவு மணி ஏழு முப்பது என காட்டியது. இப்படியே அவன் பார்த்த மூன்று முறையும் மணி ஏழு முப்பதையே காட்டியதை அவன் இன்னமும் அறியவில்லை. நேரம் ஆக,ஆக இருட்டும் தன் பணியை விட்டு விலகி பனிக்கு இடம்விட்டது. அதிகாலை வெள்ளைப்பனி மணியின் உடலை குளிரவைத்ததும்தாம் உணர்ந்தான் விடியப்போவதாய்.

தான் ஏன் இங்கே.? யாருக்காக காத்திருக்கின்றேன்..? என அநாவசியமான எண்ணங்கள் அவனுக்கு தலைசுத்ததலை கொடுக்க எழுந்து அருகில் இருக்கும் மோட்டார் வாகனத்தை எடுக்க நடந்தான்.

மணி எடுத்து வைத்த இரண்டாவது அடியில் ஸ்தம்பித்து நின்றான்.
“பெரிய”.. விபத்து. ஒரு தொழிற்சாலை வாகனமும் இரண்டு கார்களும். அந்த வாகனங்களுக்கு அடியில் மணியின் மோட்டர் வாகனமும் அதில் இரத்தவெள்ளத்தில் அடையாளம் சொல்ல முடியாத உருவமும்.

மணிக்கு கண்கள் இருண்டன. தன்னை சுற்றி இதுவரை இருந்த பனிமூட்டம் புகையாக மாறி அவனை சுவாசிக்க கஷ்டப்பட்டுத்தின.
ஆட்கள் கூட ஆரம்பித்தனர் மருத்துவ வண்டிக்கும் சொல்லியாகிவிட்டது.
மணியை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. தன் மோட்டார் வாகனத்தின் அடியில் இரத்தவெள்ளத்தில் கிடப்பவர் யார் என எட்டிப்பார்க்க முயன்ற மணியின் முதுகை ஒரு மெல்லிய கை பட்டது.
“பதட்டப்படாதே , நான்தான் தேவி வந்திருக்கேன்”
“இல்லை இல்....லை யார் நீ”
அதிர்îசியில் நாக்கு மொழிபேச தடுமாறியது.
“பயப்படாதே. நான் தேவி. எங்க என்னோட ‘போன்’ கொடு. இனி உனக்கும் இங்க வேலை இல்லை வா போகலாம்.....”

இருவரின் கால்களும் பூமியில் படாமல் அரையடி மேல் மிதந்தது..! மன்னிக்கவும் மிதந்ததன.
...........தயாஜி வெள்ளைரோஜா...........

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்