பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 01, 2026

2026-ம் ஆண்டின் நான்கில் ஒன்று. (1/4)

2026-ம் ஆண்டின் நான்கில் ஒன்று. (1/4)

இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வாசித்த புத்தகங்களை அதற்குரிய அடுக்க வேண்டும்.

இந்த முதல் மூன்று மாதங்களில் வாசிக்க எடுத்து வைத்த புத்தகங்களில் வாசித்த புத்தகங்களைவிட வாசிக்காத புத்தகங்களே அதிகம். அது அப்படித்தான் இதை படித்துவிடலாம் அதை படித்துவிட வேண்டும் என்கிற பேராசை எல்லா வாசகருக்குமே இருக்கத்தானே செய்கிறது.

வாசிக்கா புத்தகங்களை அடுத்தடுத்து வாசிக்க, இதற்கு  முன் எடுத்து வைத்திருக்கும் புத்தகங்களையும் ஒன்றாக கலந்து அடுத்த மூன்று மாதங்களில் வாசிக்க வேண்டிய புத்தகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

சரி, முதல் மூன்று மாதங்களில் வாசித்த புத்தகங்களைப் பற்றி, மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

தயார்தானே....
மொத்தம் 16 புத்தகங்கள்

👉மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில்
வாசித்தவை;

1. உப பாண்டவம்
- எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் நாவல்.
- மகாபாரதத்தை இன்னொரு பார்வையில் இருந்து சொல்லியிருப்பார். இந்நாவல் பற்றி கட்டாயம் ஒரு பதிவு எழுதவேண்டும்.

2. ஆகம்
- சிங்கள நாவலின் தமிழாக்கம்
- எழுத்து மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
- தமிழாக்கம் எம்.ரிஷ்வான் ஷெரிப்
- வயதானவனின் பார்வையில் நகரும் நாவல், அவனது ஆழ்மனதின் குரலாகவே ஒழிவு மறைவு இன்று செல்கிறது.

3. தேவமலர்
- எழுத்து ஸெல்மா லாகர் லெவ்
- தமிழில் க.நா.சு
- குறுநாவல்
- இந்த நாவலை ஏன் இத்தனை நாட்கள் வாசிக்கவில்லை என்ற எண்ணமே மேலோங்கியது.
- அற்புதமான கதை
- வாசித்து முடித்ததும் பல்வேறு கோணங்களில் கதைக்கான காரணத்தைத் தேட வைத்தது.

4. பெர்னுய்லியின் பேய்கள்
- சித்துராஜ் பொன்ராஜ்
- நாவல்
- இந்த வாசிப்பு அனுபவத்தை மாதம் ஒரு சிங்கப்பூர் தொடரில் எழுதியுள்ளேன்.
- மீள்வாசிப்பு செய்த நாவல்


👉சிறுகதைகள்/கதைகள்

5. ஊமைக் காயங்கள்
- மலேசிய சிறுகதைகள்
- மாதம் ஒரு மலேசிய புத்தகன் தொடரில் இந்தப் புத்தகத்தின் வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்.

6. சிண்டாய்
- மலேசிய எழுத்தாளர் ஜெ.அரவின் குமார் சிறுகதைகள்
- மாதம் மலேசிய புத்தகம் தொடரில் இந்தப் புத்தகத்தின் வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்.

7. நிச்சயிக்கப்பட்டப் பெண்
- எழுத்து ஆண்டன் செகாவ்
- தமிழாக்கம் எம்.கோபாலகிருஷ்ணன்
- ஒரு பெண்ணுக்கு கல்வி ஏன் தேவை என சொல்லக்கூடிய கதை.

👉கவிதைகள்

8. மையல்
- மனுஷ்ய புத்திரனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்

9. பால் வீதி
- கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

10. மிளகு- பருத்தி- மற்றும் யானைகள்
- நரன் கவிதைகள்
- இந்தத் தொகுப்பின் வாசக அனுபவத்தை வாசகசாலை இணைய பக்கத்தில் எழுதியுள்ளேன்.

11. எனும் போது
- மலேசிய கவிஞர் யோகி கவிதைகள்
- இந்தத் தொகுப்பை மாதம் ஒரு மலேசிய புத்தக தொடரில் எழுதியுள்ளேன்.

12. கடலெனும் வசீகர மீன் தொட்டி
- சிங்கப்பூர் கவிஞர் சுபா செந்தில்குமார் கவிதைகள்.
- இந்தத் தொகுப்பின் வாசிப்பனுபவத்தை மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடரில் எழுதியுள்ளேன்.

13. நீராம்பல்
- சிங்கப்பூர் கவிஞர் கங்கா பாஸ்கரன் கவிதைகள்
-இந்தத் தொகுப்பின் வாசிப்பனுபவத்தை மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் தொடரில் எழுதியுள்ளேன்.


👉கட்டுரைகள்/ இதர வாசிப்பு

14. சோதிமிகு நவகவிதை
- அப்துல் ரகுமானின் கவிதைகள் குறித்த கட்டுரைகள்.

15. துளிக்கனவு
- ஜெயமோகன்
- அனுபவக்கதைகள்

16. ரயிலேறிய கிராமம்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- 30க்கும் அதிகமான புத்தகங்கள் பற்றிய காட்டுரைகள் அடங்கிய தொகுப்பு

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்