பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 26, 2012

அடுத்த கட்ட வாசிப்பு

25.4.2012. கொஞ்சமாய் இடைவேளி விட்டு இன்று வாங்கிய புத்தகங்கள்.

1. நீர்ப்பறவைகளின் தியானம்.
- எழுத்து யுவன் சந்திரசேகர்
- 10 சிறுகதைகளின் தொகுப்பு

2. ஏற்கனவே.
- யுவன் சந்திரசேகர்
- 15 சிறுகதைகளின் தொகுப்பு

3. மீன் மலர்.
- எழுத்து தமிழ்மகன்
- 21 சிறுகதைகளின் தொகுப்பு

4. நீல.பத்மநாதன் கதைகள்
- நீல.பத்மநாதனின் 31 சிறுகதைகளின் தொகுப்பு.



(ஜெயமோகனின் புத்தகத்தின் வழி எனக்கு அறிமுகமானவர் யுவன் சந்திரசேகர். சமீபத்தில் தேடிக் கொண்டிருந்த சாரு நிவேதிதாவின் 'காபரூப கதைகள்' தொகுப்பு இருந்தும் அடுத்த மாதம் வாங்குவதற்கு எடுத்து வைத்திருக்கிறேன்.')

ஏப்ரல் 25, 2012

ஜெ.மோ-வின் நிழல்வெளிக் கதைகள்

24.4.2012 - இன்று முதல் வாசிக்கத் தொடங்கியிருப்பது ஜெயமோகனின்
'நிழல்வெளிக் கதைகள்' சிறுகதை தொகுப்பு.

1. இமையோன்
2. பாதைகள்
3. அறைகள்
4. தம்பி
5. யட்சி
6. ஏழுநிலைப் பந்தல்
7. இரண்டாவது பெண்
8. குரல்
9. ஐந்தாவது நபர்
10. ரூபி

ஆகிய 'பேய்க்கதைகள்' அடங்கியவை இவை.

"மனிதன் அழியலாம், ஆனால் அவன் செய்யும் அநீதி அழியாது என்ற எண்ணமே எனக்கு இக்கதைகள் எழுதி முடிக்கையில் தோன்றியது " என்கிறார் ஜெயமோகன்

ஏப்ரல் 21, 2012

மீண்டும் ஜெ.மோ

(20.4.2012)

தற்போதைய வாசிப்பில்;
ஜெயமோகனின் 'வாழ்விலே ஒரு முறை' - அனுபவக் கட்டுரைகள்.

மார்ச் 30, 2012


29.3.2012


தற்போதைய வாசிப்பில் மீண்டும் ஜெயமோகன்.
ஜெ.மோ-வின்  ‘ஆழ்நதியைத் தேடி’ 15 கட்டுரைகள் 113 பக்கங்கள்.

கடந்த மூன்று மாதங்களாக ஜெ.மோ-வின்

1.   நவினத் தமிழிலக்கிய அறிமுகம்

2.   புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்

3.   மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள்


   ஆகிய நூல்களைப் படித்ததின் வழி பலவற்றை , பலரின் எழுத்துகளை , பல எழுத்தாளர்களை அறிய முடிந்தது.

   இந்த வாரம், இந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டே மற்ற மூன்று புத்தகங்கள் கொடுத்த அனுபவத்தை எழுத முயல்கிறேன்.

மார்ச் 22, 2012

கோவமுண்டு கொள்கையற்ற



#படிக்கும்-முன் குறிப்பு# இதனை நீங்கள் படிப்பீர்கள் என்ற பயமல்ல; படித்தும் நீங்கள் இப்படித்தான் என்ற பாவம்தான் வேறொன்றும் அல்ல.......



போனார்கள் வந்தார்கள்
பயணமாம்
போவார்கள் வருவார்கள்
இன்னுமாம்

போனதின் அடையாளம் சொல்லி
போட்டோக்கள்
போவதின் அடையாளம் சொல்ல
அறிக்கைகள்

படிக்காத நீங்கள் - அங்க
படைப்பாளிகளெனில்
பிடிக்காத நாங்கள் - உங்க
கூட்டாளிகளல்ல

மார்ச் 20, 2012

ஜெமோவின் 'மேற்குச்சாளரம்'

19.3.2012
ஜெயமோகன் எழுதிய 'புதிய காலம்- சில சமகால எழுத்தாளர்கள்' எனும் புத்தகத்தை படித்தாகிவிட்டது. முக்கிய எழுத்தாளர்களின் அறிமுகமும், அவர்கள் முக்கிய ஆக்கங்கள் குறித்தும் தெரிந்துக் கொள்ள முடிந்தது.

இப்போது வாசிப்பில், ஜெயமோகன் எழுதிய ...
'மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள் ' எனும் புத்தகம்.

பத்தோன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரல்லி ) முதல் சமகாலத்து நாவலான, காண்டாக்ட் ( கார்ல் சகன் ) வரை, ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்) முதல் மத்திய கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது என சொல்லியிருக்கிறார் - ஜெமோ.

மூல மொழியை வேறாகக் கொண்டப் படைப்புகளை தமிழில், கதையை சுருக்கமான சித்திரத்தில் தன் விமர்சனத்துடன் கொடுத்திருக்கிறார் ஜெமோ.

நான் என்பது நான் மட்டுமல்ல



நிசப்தத்தின்
இரைச்சலைத் தாங்காது
கத்துகிறேன்
எதிரொலிக்கிறது
இரைச்சலின் நிசப்தம்

###################################


பறக்காத
கரப்பான் பூச்சிகள்
பயப்படவில்லை
குழந்தைகள் உடன் பெரியவர்கள்

####################################

எனக்காக பிரார்த்தியுங்கள்
வேண்டுதல் தொடுப்பது
சாத்தானெனில்
கோவித்துக் கொள்ள மாட்டார்களா
காலம் காலமாக
பிரார்த்தனைக்கு பெயர்போன
கடவுள்கள்......!

###################################

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்