பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 28, 2010

மரணம் நெருங்கியவனின் மன்றாடல்...













"மரணம் வந்தால் என் செய்வீர்..?"





"மரிப்பேன்.. வேறென்ன செய்ய..!"


இந்த கேள்வி பதிலோடு இனி;
பயணிக்க இயலாது...
மனம் திறந்த வாக்குமூலம் கொடுக்கின்றேன்,
நிறைவேற்றுங்கள்....
கடைசி ஆசை...

இதுவரை நான் சேமித்த;
பணத்தின் எண்ணிக்கை காட்டிலும்;
புத்தகங்கள்தான் அதிகம்.....
எனது படைப்பிற்காகவும்;

அவளிடம் படித்துக் காட்டவும்....

என்;
இறுதிச் சடங்கில் அவள் இருக்கமாட்டாள்,

அவள்.

இறுதி எனக்கில்லை என்பதை இன்னமும் நம்புகின்றாள்;

பாவம்....

'என்' பிறகு என் புத்தகங்களை

அவளிடம் கொடுத்துவிடுங்கள்,

என் மனைவியை விடவும்

அதனை அவள்;

அதிகம் நேசிப்பாள்;

நான் இல்லாத போதும்;

என் புத்தகங்கள் அவளோடு,

சண்டையிடும்;

சமரசம் செய்யும்;

கட்டிலில் படுக்கும்;

கட்டிப் பிடிக்கும்;

கோவம் கொடுக்கும்;

ஜோக்கும் அடிக்கும்;

அதிலும் நான் கோடிட்ட இடங்கள்.....

அவளை என்னோடு ;

பேசவைக்கும்

காதோரம் கூச வைக்கும்;

கவிபாட ஆசை வைக்கும்'

உடலோடு உரசவைக்கும்;
வார்த்தைகளால் அசரவைக்கும்;

இன்னும் இன்னும் எல்லாம் செய்யும்.,


என் துரோகம் உட்பட........

அப்போதும்,

எனக்காக எதையாவது செய்வாள்;

என் மனைவி மீது கோவம் கொள்வாள்....

அதும் என்னை புரியாமல் இருக்கின்றாளே எனதான்;

அவள் யார்..?

எல்லோர் வாழ்விலும் வந்து போகின்ற;
பெயர் குறிப்பிட தெரியாத;
பெயர் குறிப்பிட முடியாத;.........

அப்பாவி பெண்..!
இருக்கும் போது சொல்ல வக்கில்லாதவன்.....
இறுதி சடங்கிற்கு;
முன்னதாக சொல்வதில் கொஞ்சம் நிம்மதி;
மறவாமல் அவளிடம் புத்தகங்களைக் கொடுத்துவிடுங்கள்...












இப்படிக்கு தயாஜி

ஜூலை 01, 2010

ரசித்தவை 1

படைப்புலக பெண்பாரதியும்,, என்வரையில் முன்மாதிரியும் ஆகிய என்னவள் "கவிஞர் தாமரையின்" கவிதை இது.
'ஆண்கள் அறிக' என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த படைப்பு. (30062010)
இதை படிக்கும் போதே நான் செய்த தவறுகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் புரிந்துக் கொண்டேன். இதன் கடைசி நான்கு வாக்கியம் என்னுள், என் எண்ணத்துள்.... ஊசியை துளைத்தது.
'நன்றி கவிதாயினி தாமரை'
இப்படிக்கு தயாஜி.....

ஜூன் 26, 2010





காது;
உங்களுக்காக கேட்கின்றது,

மூக்கு;
உங்களுக்காக சுவாசிக்கின்றது,

நாக்கு;
உங்களுக்காக ருசிக்கின்றது,

வாய்;
உங்களுக்காக பேசுகின்றது,

கண்.......
உங்களுக்காகவும் பார்க்கும்....

ஒருவர் செய்யும் கண்தானம் இருவர்க்கேனும் பார்வை கொடுக்கும், கண்தானம் செய்ய கைகோர்ப்போம் வாரீர்.......

'மன'யொப்பம்....


1.8.2007-லில் நயனம் வார இதழிலில் வெளிவந்த கவிதை இது. அப்போது எனக்கு வயது 20. இந்த கவிதையில் என் "பெயரை" டைப் செய்யாமல் என் கையெழுத்திலேயே அதனைப் பிரசுரம் செய்தார் இதன் ஆசிரியர். அவருக்கு என் நன்றி.படிட்யுங்கள் கருத்து பறிமாறுங்கள், விரைவில் புத்தகம் வெளியிட எண்ணம் கொண்ட எனக்கு உதவியாக இருக்கும்....
இப்படிக்கு தயாஜி....

விழிமொழியுடையாள்.....


24/10/2007-ல் நயனம் வார இதழில் வெளிவந்த என் படைப்பு.....
படித்து கருத்து பறிமாறலாம் வாருங்கள் உள்ளங்களே...
விரைவில் நூல் வெளியிட எனக்கு உங்கள் கருத்து தேவை.......
இப்படிக்கு,
தயாஜி........

ஹெலோ சொல்லேன் pls....


எனது இந்த கவிதை, 1.7.2010 மன்னன் மாத இதழில் வந்துள்ளது. என் படைப்புத்திறனுக்கு பிள்ளையார்சுழி போட்டது இந்த மாத இதழ்தான்...
இந்த கவிதை புரியவில்லை என்று என் நண்பர் ரொம்ப மனசு ஒடிஞ்சி போய்ட்டார்....
பாவம் கவிதை என்பது பாடமல்ல அனுபவம் என்று அவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்....
நீங்கள் இந்த கவிதையை படித்து உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள் நாம் கருத்து பரிமாறலாம்.....
இப்படிக்கு தயாஜி...

ஜூன் 22, 2010

21/6/2010 இன்றோடு ஓராண்டு நிறைவை நாடுகின்றதுஇந்த விருது நிகழ்வு . விருது பெற்ற எழுத்தாளர்கள்...
எம்.கே.ஞானசேகரன் (கவிதை)
இ.தெய்வானை (சிறுகதை)
வே.சபாபதி (கட்டுரை)
சந்திரா சூரியா (நாடகம்)
இளையத் தலைமுறை விருது பெறுவோர்கள்...
தயாஜி (கவிதை)
முருகையா மூத்துவீரன் (சிறுகதை)
எஸ்.பி.சரவணன் (கட்டுரை)
கானா (நாடகம்)
இத்தனை பேர் மத்தியில் இத்துனைச் சின்னவனான தயாஜி இருக்க காரணம் ஒன்றுதான்
பேனா....
பேனா உன்னை மறப்"பேனா"....
உன்னால்தான் அப்பா....
இப்படிக்கு தயாஜி.........

கடந்த ஆண்டு இதே நாள், மலேசிய எழுத்தாளர் சங்கம் எனக்கு டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கியப் பரிசை, கவிதைத் துறைக்காகக் கொடுத்தனர். இதற்கு நான் தகுதியானவனா என்பதெல்லாம் நான் யோசிக்கவில்லை....

என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய திருப்தி எனக்கு இதில் உண்டு.....

இன்று, அடுத்த ஆண்டு நான் வெளியிடப்போகும் என் படைப்புகள் அடங்கிய புத்தகத்திற்காக வெலையைத் தொடங்கியுள்ளேன்....

என் முதல் புத்தகத்தை வாங்கும் கரங்கள் அப்பா "வெள்ளைரோஜாவே" உன் கரங்களாகத்தான் இருக்கும்....

இப்படிக்கு தயாஜி.........

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்