ஜூன் மாத (2016) அம்ருதா இதழில் 'தெருச்சருகுகள்' என்கிற சிறுகதையை எம்.ரிஷான் ஷெரீப் எழுதியுள்ளார்.முதல் வாக்கியம் மூலமே அதிர்ச்சி கொடுத்து கதைக்குள்ளே அழைத்துவிடுகிறார்.
தோய்வில்லாத நடை, எங்கும் நிற்க மனமின்றி ஒரே மூச்சில் படிக்க முடிகிறது.புத்தர் பிறந்த நாள் விழாவில் ( வெசாக் தினம்) கதை தொடங்கி அன்றே
முடிகிறது. பிணமாகிவிட்ட குழந்தையை உயிரோடிருப்பது போல காலில் படுக்க
வைத்து பிச்சை எடுக்கிறாள் புஷ்பமாலா.
ஒரு பக்கம் ஏஜெண்டு குறித்த பயம், இன்னொரு பக்கம் குழந்தை பிணத்தை மொய்க்க வந்திருக்கும் இலையான்கள், அவள் மறக்க நினைக்கும் நினைவுகள் என வாசகர்களின் கதையின் ஊடே பயணிக்க வைத்திருக்கின்றார்.
சேரி வழியே நடந்து சென்ற உணர்வை கொடுக்கிறது கதை. பிச்சைக்காரர்களை வைத்து வியாபாரம் செய்யும் ஏஜெண்டுகளும் வந்துபோகிறார்கள்.
நல்ல கதை படித்த நிறைவை கொடுக்கிறது.
இனி எம்.ரிஷான் கதை என்றால் நம்பி படிக்கலாம் என தோன்றுகிறது. வாழ்த்துகள் ரிஷான்.
- தயாஜி
நல்ல கதை படித்த நிறைவை கொடுக்கிறது.
இனி எம்.ரிஷான் கதை என்றால் நம்பி படிக்கலாம் என தோன்றுகிறது. வாழ்த்துகள் ரிஷான்.
- தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக