மாத (2016) அம்ருதா இதழில், ' அம்மா பார்த்த சினிமா' என்ற கதையை
வைத்தீஸ்வரன் எழுதியுள்ளார். அதனை சிறுகதை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
ஆனால் அது கதையாகவே இருக்கிறது. தான் இயக்கிய மூன்றாவது திரைப்படத்தின்
வெளியீடு குறித்தும் அதற்கு வெற்றி கிடைத்தாகவேண்டிய சூழல் குறித்தும்
முத்துவேலன் யோசிக்கிறார்.
மறுநாள் கிராமத்தில் இருந்து அம்மா வருவதாகவும்
மகனின் திரைப்படத்தை பார்க்க ஆவல் கொண்டுள்ளதாகவும் தம்பி தொலைபேசியில்
சொல்கிறார். திரைப்பட வெளியீடு இன்ன பிற வேலை காரணமாக வேண்டாம் வெறுப்பாக சம்மதிக்கிறார். தன் மனைவி அம்மாவை பார்த்துக்கொள்வதாக சொல்கிறார்.
படத்தின் பிரிவியூவை பிரமுகர்கள் பார்க்கிறார். அம்மாவும் அரை தூக்கத்தில் படம் பார்ப்பதை கவனிக்கிறார். கடுப்பாகிறார்.
படத்தின் பிரிவியூவை பிரமுகர்கள் பார்க்கிறார். அம்மாவும் அரை தூக்கத்தில் படம் பார்ப்பதை கவனிக்கிறார். கடுப்பாகிறார்.
இரவு வீட்டிற்கு வந்ததும் அம்மா படம் குறித்து ஏதோ சொல்ல வருகிறார். வேண்டாம் வெறுப்பாக கேட்கிறார் மகன். தீபாவளி இரவு காட்சியில் முழு நிலவை காட்டியிருக்கும் மகனிடம் தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை நிலவு இருக்காது என சொல்கிறார் அம்மா. மகனின் கண் ஈரமாகிறது . கதை முடிகிறது.
ஒரு பக்க கதையாக வரவேண்டியதை நீட்டித்திருப்பதாக தோன்றுகிறது. மூத்தோரை
மதி, பெற்றோரை மதி போன்ற நன்னெறி சொல்வது போல கதை அமைந்துள்ளது. கொஞ்சம்
சிரத்தை எடுத்திருந்தால் தலைமுறை இடைவெளியை அழகாகச் சொல்லியிருக்கலாம்.
இக்கதையை வைதீஸ்வரன் எழுதியுள்ளார். இவர் பெயரை புதிதாக பார்க்கிறேன். கதை சொல்வது கைவந்துள்ளது. சிறுகதை எழுத ஆரம்பிக்கவேண்டும் என வாசகனாய் சொல்கிறேன். அடுத்து சிறுகதைக்காக காத்திருக்கிறேன் .வாழ்த்துகள்.
தயாஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக