Pages - Menu

Pages

ஜூலை 02, 2016

கதை வாசிப்பு 3 - ‘பிளிறல்’

   ஜூன் (2016) தீராநதியில் 'பிளிறல்' சிறுகதையை சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ளார்.மான் வேட்டைக்கு போக தயாராவதில் இருந்து கதை தொடங்குகிறது. எள்ளல் நிறைந்த கதை சொல்லல். சில இடங்களில் நம்மையறியாமல் சிரிக்க வைக்கிறது.மான் வேட்டையில் இருந்து புலியின் தாக்குதல், யானைகளின் தொல்லை, முயல் கறி என கதை திசை மாறுவதாக தோன்றினாலும் கதையின் முடிவு அதன் காரணத்தை சொல்கிறது
.
   முன் யூகங்களை கலைத்துக்கொண்டே கதை முன்னேறிச்செல்வது இதன் சிறப்பாக நினைக்கிறேன். தொடக்கத்தில் வேட்டையாடி சாப்பிடும் கறியின் ருசியை உணர செய்யும் கதை நிறைவாக குற்ற உணர்ச்சியை வாசகர் மனதில் ஏற்றிவிடுகிறது.

- தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக