Pages - Menu

▼

Pages

▼

அக்டோபர் 13, 2026

- எப்போதுதான் தெரியும் -


போராட்ட களத்தில்
பெண்ணொருத்தி
சுடிதாரில் ஓடுகிறாள்

அதிகார வர்க்கம்
போட்ட
தடுப்பு இரும்பை
ஒரு பிடி
பிடிக்கின்றாள்
எம்பி எழுந்தவள்
இந்தப் பக்கம் குதித்து

கீழே விழுந்த
சக தோழனை
தூக்கி நிறுத்தி
கர்ஜிக்கின்றாள்

அவள் எம்பி குதித்த போது
ஒரு கணம்
வெளியில் தெரிந்த
அந்த மார்புதான்
உங்களுக்கு பேச கிடைக்கிறதா

ஜந்துக்களே
அவளுக்கு
ஒரு பல் உடைந்து
கைகால் கன்னிப்போய்
கன்னம் வீங்கி
நெற்றியில் வழியும்
உதிரம்

உங்களுக்கு
எப்போதுதான் தெரியும்...

#தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக