இன்றொரு
கவிதை வாசித்தேன்
நான் சொல்ல நினைத்ததை
சொல்லாமல் தவித்ததை
சொற்களில் சிக்கி கிடந்ததை
அப்படியே எழுதியிருந்தான்
ஒரு கவிஞன்
எழுதியவன்
யாராக இருந்தாலும்
இந்தக் கவிதையை எழுதும்போது
அவன்
நானாக இருந்திருக்கிறான்
இனி இந்தக் கவிதை
என்னுடையது....
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக