Pages - Menu

Pages

ஜூலை 02, 2025

- ஊஞ்சலாடும் உள்ளம் -


அவன் தற்கொலை

செய்துகொள்ளும் முன்

ஒருபோதும்

அவன் அதற்கு ஆசைப்படவேயில்லை


நமக்குத்தான்

அது தற்கொலை


அவனைப் பொருத்தவரை

இத்தனை நாட்களாக

நடமாடி

நாடகமாடிக்கொண்டிருந்த

தன் பிணத்தை

தானே

கழுத்தில் கயிறு கட்டி

ஊஞ்சலில் ஆட்டிவிட்டிருக்கிறான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக