"உலகில் பல நாடுகளில் தமிழ் இருக்கிறது; ஆனால் மலேசியாவில் மட்டுமே தமிழ் வாழ்கிறது "
மலேசியாவிற்கு வரக்கூடிய சினிமா பிரபலங்கள் பொதுவாக மேடைகளில் இதைத்தான் கட்டாயம் பேசுவார்கள். அதற்கு நாம் கைத்தட்டி அவர்களை மேலும் உற்சாகப்படுத்துவோம்.
ஆனால், அவர்கள் எடுக்கும் சினிமாக்களில் காட்டக்கூடிய பெரும்பாலான மலேசிய கதாப்பாத்திரங்கள் அவர்கள் செல்வதற்கு முரணாக இருக்கும்.
'ஹேய் என்னலா.. இங்க வா லா....'
'என்க்கு உன்ன்னை பிடிக்குது.. உன்க்கு என்ன்னை பிடிக்குதா...'
இப்படித்தான் பேசுவார்கள். நாம் கூட அப்படி பேசுபவர்களைப் பார்த்திருக்க மாட்டோம். இவர்களை எங்கிருந்து கண்டுபிடிக்கிறார்கள் என தெரியவில்லை. அதிலும் பல கதாப்பாத்திரங்கள் பாதி லூசுகளாக இருக்கும்.
சந்தேகம் இருந்தால் சில திரைப்படங்களைப் பார்க்கலாம். ஏதோ இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நம்மூர் நாயகன் முகேன் ராவை திரை நாயகனாகப் பார்க்கும் மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது.
எனது சிறுவயதில் 'மலேசிய ரவிச்சந்திரனின்' காதலிக்க நேரமில்லை, அதே கண்கள், போன்ற திரைப்படங்களைக் பார்த்து ரசித்த பொழுதுகள் உண்டு. பின்னர்தான் தெரிந்தது அவர் மலேசியர் என்று. வருத்தம் என்னவெனில் நான் தெரிந்துகொண்டு தேடும் சமயங்களில் அவர் நாயகன் அந்தஸ்த்தை தவறவிட்டிருந்தார். அதற்கு பின்னணி காரணமாக எம்.ஜி.ஆரை இணைத்து ஒரு கதையை இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
மலேசிய ரவிச்சந்திரனின் குரலும் மலேசிய வாசுதேவனின் குரலும் அவர்களின் தமிழும்தான் எத்தனை இனிமையானது என யோசிக்காமலிருக்க முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக