Pages - Menu

Pages

பிப்ரவரி 24, 2022

- நண்பர்களை அழைக்கிறேன் -

மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் 'இயலின் குறுங்கதைப்' போட்டியை நடத்தினோம்.

போட்டிக்கு முன்பதாக பங்கேற்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறையையும் வழிநடத்தினோம். மாணவர்கள் ஆர்வத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் கலந்துகொண்டார்கள். ஒரு நாள் பயிற்சி பட்டறையில் அவர்கள் பெற்ற அறிமுகத்தைத் தொடர்ந்து ஆளுக்கொரு குறுங்கதையை எழுதி போட்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அத்தோடு நின்றுவிடாமல் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.

ஆர்வத்துடன் இருக்கும் இதுபோன்ற இளம் தலைமுறைக்கு தம்மால் இயன்ற பங்களிப்பையும் பல இடங்களில் புதிய தொடக்கத்தையும் ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டிருக்கும் 'மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்திற்கு' எனது அன்பு.

25-02-2022-டில் நடக்கவிருக்கும் குறுங்கதைப் போட்டி வெற்றியாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நமது கைத்தட்டல்களும் மனதார சொல்லும் பாராட்டு வார்த்தைகளும் இளம் தலைமுறையினர்க்கு அவசியம் என்று நம்புகிறவன் என்கிற முறையும் உங்களையும் அழைக்கிறேன்.

மலேசிய இலக்கியச்சூழல் எப்படி இருக்கிறது என அமர்ந்து குறை பேசாமல், எப்படி இருக்க வேண்டும் என களத்தில் இறங்கி நிறை காணுவதற்கான காரியங்கள் சாதித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் சிறுபுள்ளி என இருப்பதில் மகிழ்ச்சி...

இக்குறுங்கதை போட்டியின் பயிற்றுனராக எனக்கு கிடைக்கப்பெற்ற கதைகளில் பலவும் புதிய பாணி, புதிய கதைக்களன்களைக் கொண்டிருந்தன. அவை பற்றி நாளை நிகழ்ச்சியில் பேசுகிறேன்.....

1 கருத்து:

  1. சிறந்ததொரு முயற்சி. வாழ்த்துகள். இலக்கிய வளர்ர்ச்சிக்குத் தேவையான முன்னெடுப்பு. படைப்பிலக்கியத்தில் இளையோர் பங்கேற்பு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதற்கு இத்தகைய நிகழ்ச்சிகள் துணைப்புரியும் என்பதில் ஐய்ச்மில்லை.

    பதிலளிநீக்கு