#கதைவாசிப்பு_2020_10
கதை – வேறு நினைப்பு
எழுத்து –
கு.ப.ராஜகோபாலன்
புத்தகம் –
காலச்சுவடு ஜனவரி 2020
கல்கி, மே 20, 1943-ல் வெளிவந்த கதை. காலச்சுவவடு
கதைத்தடம் பகுதியில் மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.
யோசிக்கையில்
கு.ப.ராவின் கதையை இப்போதுதான் படிப்பதாக தோன்றுகிறது. அல்லது படித்து நினைவில் நில்லாமலிருக்கலாம்.
மூன்று பக்க கதைதான் என்றாலும் சிரிக்காமல் இக்கதையைப் படிக்க முடியவில்லை.
கணவர் ஓர் எழுத்தாளர். எழுத வேண்டிய கதையைக் குறித்து
மொட்டைமாடியில் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்.
மனைவி வந்தது கூட அவருக்கு தெரியவில்லை. மனவியில் பேச்சு அவரை சுய நினைவிற்குக் கொண்டுவருகிறது.
அங்கிருந்து கதை ஆரம்பமாகிறது. மனைவிக்கு பொய்க்கோவம். கணவன் நிலமையை சரி செய்ய வேண்டும்.
மனைவியை சமாளிக்க எழுத்தாளர் முயல்கிறார். மனைவி
அவரை மிஞ்சும் அளவிற்கு பேசுகிறார்.
வழக்கமாக
கமல்ஹாசன் திரைப்படங்களில் அவருக்கென்று ஒரு பிரித்தியேக கதாப்பாத்திரத்தன்மை அமைந்துவிடும்.
சமாளிப்பு. நிலமையை சீர்செய்ய எப்படி பேசி சமாளிக்கிறார். அவர் வென்றாரா இல்லையா என்பதுதான்
அதன் சுவாரஷ்யம். உதாரணமாக பஞ்சதந்திரம் திரைப்படத்தில் , நண்பரின் மாமனார் நாகேஸை
வாகனத்தில் ஏற்றிக்கொள்வதற்கு முன்னும் ஏற்றிக்கொண்ட பின்னும் ஏற்படும் உரையாடல்களை
இப்போது பார்த்தாலும் சிரிக்கவும் ரசிக்கவும் முடியும்.
இங்கு கணவன் மனைவியின் உரையாடலும் அப்படித்தான்
அமைந்திருக்கிறது. இருவரில் யார் வென்றார்கள் என்பதுதான் இந்த கதையிலும் சுவாரஷ்யம்.
அதன் ஊடே கணவன் மனவியின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று நாசூக்காகவும் சொல்லியுள்ளார்
எழுத்தாளர்.
படித்து முடித்தும் சிரிப்பை அடக்கிவிட முடியவில்லை.
வாய்ப்பு இருப்பின் படித்து சிரிக்கலாம்.
இக்கதை கு.ப.ராவின் இதர கதைகளையும் தேட வைத்துள்ளது.
இங்கு பலருக்கு நகைச்சுவை என்கிற பெயரில் எழுத்திலும் பேச்சிலும் அடுத்தவரை இம்சிக்கவே
முடிகிறது. ஆயினும் 1943-ம் காலத்தில் தன் கதையை இப்படியாக அமைத்திருப்பது ஆச்சர்யத்தைக்
கொடுக்கிறது.
இக்கதை
மீண்டும் கு.ப.ராஜகோபாலன் கதைகளை தேடி வாசிக்கவும் மீள் வாசிக்கவும் கதைகள் பற்றிய
உரையாடலை தூண்டும் என நம்புகிறேன்.
-
தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக