சில நாட்களாக தொடர்ந்துக் கேட்டுக்கொண்டிருக்கும்
பாடல். இதன் பின்னனியில் இருக்கும் ஆழமான காரணத்தை
தேடுவதற்கு மனதில் தைரியம் இல்லை. இசை, பாடல் வரி, குரல், காட்சி என எதைச் சொல்லி மனதிடம் இருந்து தப்பிக்கலாம் என்றாலும்
பயனில்லை. இசை ராசரின் பக்தனென்றால் அவர்தான் காரணம் என்றிருப்பேன். பாடலின் வரிகளை
தேடுபவனென்றால் கவிஞர் கபிலனைச் சொல்லியிருப்பேன், பாடகரின் விரும்பியென்றால் சிட்
ஶ்ரீராம் என நினைத்திருப்பேன், காட்சிக்கும் கதைக்கும் ரசிகனென்றால் இயக்குனர் மிஷ்கினை
சொல்லியிருப்பேன். ஆனால் எதுவும் முடியவில்லை. எந்த காரணத்திற்கும் அடங்கிவிடாத ஏதோ
ஒன்று மேற்சொன்ன எல்லாவற்றிலும் இருந்துக் கொண்டு என்னுள் ஏதோ செய்கிறது.
பார்வையற்ற
ஒருவன் தன் காதலிக்குப் பாடும் பாடலாக இதனைப் படமாக்கியிருப்பார்கள். பார்வையற்ற காதலனுக்கு
மட்டுமல்ல தன்னால் எதுவும் இயலாத எந்த ஒரு ஆணுக்கும் இப்பாடல் பொருந்திவிடுகிறது.
‘பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல
எதுவும் இல்லை’
இவ்வரிகள் அப்படியே என்னை ஸ்தம்பிக்க வைத்துவிட்டன.
மீண்டும் மீண்டும் இவ்வரிகளை சொல்லிப்பார்க்கிறேன். பார்வையில்லாதவனுக்கு பாதையா இருப்பவள்;
எப்படியானவளாக இருக்க வேண்டும். அப்படி ஒருத்திக்கு தன்னிடம் கொடுக்க இருப்பது காதல்
மட்டுமே என ஆண் நினைக்கிறான். அது அவனது வாழ்வில் வரமா சாபமா என எனக்கு பிடிபடவில்லை.
தன்
இயலாமையை முழுவதும் ஆண் ஒப்புக்கொள்கிறான். அவனிடம் மேல் பூச்சுக்கான எந்த பொய்மைகளும்
இல்லை. இப்படியானவர்களின் காதல் நம்பிக்கையைக் கொடுக்குமா? ஆனால் அவன் தான் நம்பும்
ஒற்றைக்காதலை பற்றி படர்கிறான்.
காதலில்
தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கடந்துவிட்டவன் என்பதாலோ என்னமோ; ஆழ்மனம் மூடிவைத்திருக்கும்
எதையும் திறந்துப்பார்க்க தைரியம் அற்றவனாய் இரவுகள் முழுதும் இதனை திரும்ப திரும்பக்
கேட்கிறேன். எந்த முகமும் என்னிடம் தங்களின் முகவரி காட்டிவிடாதபடி கண்கள் கலங்கி நிற்கிறேன்.
அழுவதற்கு காரணமும் காயமும் தேவையா என்ன? நம்மை
நாமே அழவைக்க நினைவுகளின் சிறு அதிர்வு போதாதா?
பாடல்-
உன்ன
நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச
உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
உன்ன
நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச
உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
உன்ன
நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச
உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
யாரோ
அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ
அவளோ தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன
நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச
உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
வாசம்
ஓசை இவைதானே எந்தன் உறவே ஓ..
உலகின்
நீண்ட இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே
உன்னால் என்னை கண்டேன்
கண்ணை
மூடி காதல் கொண்டேன்
பார்வை
போனாலும் பாதை நீதானே
காதல்
தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
உன்ன
நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச
உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
ஏழு
வண்ணம் அறியாத ஏழை இவனோ
உள்ளம்
திறந்து போசாத ஊமை இவனோ
காதில்
கேட்ட வேதம் நீயே
தெய்வம்
தந்த தீபம் நீயே
கையில்
நான் ஏந்தும் காதல் நீதானே
நீயில்லாமல்
கண்ணீருக்குள் மூழ்கி போவேன்
உன்ன
நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச
உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
யாரோ
அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ
அவளோ தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன
நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச
உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக