Pages - Menu

Pages

ஜூலை 02, 2016

கதை வாசிப்பு 8 - ‘குருவி சாமியார்’

   ஜூன் மாத (2016) உயிர்மையில் விமலாதித்த மாமல்லன் எழுதியுள்ள 'குருவி சாமியார்' சிறுகதை வந்துள்ளது. பெண் பித்தன் சாமியாரானது குறித்து பேசப்போவதாக கதை தொட ங்குகின்றது. முதல் வரியிலேயே கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது அல்லது நாமாக அப்படி நினைத்துக் கொள்கிறோமோ என யோசிக்கிறேன்.

   ஜாலியாக கதை நகர்வதாக காட்டி அதிலிருந்து கதை பெரும்பாலான சாமியார்கள் தொடக்கத்தை காட்டுகிறது .
சுவாரசியமான கதை. தோய்வின்றி படிக்கலாம். கதையில் சாமியார் மாற்றிக்கொள்ளும் இடமும் அதன் பிறகு நடப்பதும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

   நிறைவாக குருவியுடன் நடக்கும் உரையாடல்தான் அருமை. அந்த உரையாடல் பிறகே சாமியார் குருவி சாமியார் என அறியப்படுகின்றார். ஞானப்பிரகாசம் வைத்திருக்கும் ஓவியங்களும் கவர்கின்றன.
எங்கிருந்து எது தொடங்கும் என்பதில் எந்த அறிகுறியும் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அப்படியான அறிகுறிகளை கண்டுக்கொள்ள நாம் நம்மை தயார் செய்ய வேண்டியுள்ளது .ஏனெனில் அதுதானே வாழ்க்கை.

- தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக