Pages - Menu

Pages

ஜூலை 02, 2016

கதை வாசிப்பு 1 ’வள்ளல்’

    ஜூன் மாத (2016) அம்ருதா இதழில் பாவண்ணன் எழுதிய 'வள்ளல்' சிறுகதையை வாசித்தேன். எம்.ஜி.ஆர்க்கா காத்திருக்கும் மாணவன் ஒருவனின் இருந்து கதை தொடங்குகின்றது. சினிமா படபிடிப்பிற்காக எம்.ஜி.ஆர் வருவார் என காத்திருந்து ஏமாற்றம் அடையும் தங்கமணியை சீண்டிப்பார்க்கிறான் பன்னீர். இவருவரையும் அடித்துக்கொள்ளாமல் பார்த்து கிண்டல் செய்கிறான் ரங்கசாமி. முழு நேர மாடு மேய்ப்பவர்களில் பள்ளி விடுமுறைக்கு மாடு மேய்க்க வருகிறான் தங்கமணி.

   ஆரம்பத்தில் சினிமா மோகம் பிடித்தவர்கள் போல வாசகர்களை புரிய வைக்கிறார் எழுத்தாளர். பின்னர் அது தவறென நாம் உணர்கிறோம். அவர்கள் சந்திக்கும் பாட்டியுடனான உரையாடலே அதற்கு சான்று. பழைய நடிகர் பாலையாவை சந்தித்த அனுபவம் குறித்து சிலாகிக்கிறார் பாட்டி. அப்போது பாலையா கொடுத்த பணத்தில்தான் தான் தன் வீட்டையே புதுப்பித்ததாக பெருமை கொள்கிறார். 

    வீட்டை புதுப்பித்ததற்கு பதில் கன்று குட்டியையோ கறவ மாட்டையோ வாங்கியிருந்தால் இன்னேரம் அவை வளர்ந்து பால் தந்து பண்ணையாகி பாட்டியின் நிலமையை மாற்றியிருக்கும் என சொல்லும் ரங்கசாமி பாட்டியை யோசிக்க வைக்கிறான்.

    உரையாடல் நிகழ்த்தாமல் மாணவர்கள் குறித்தோ இளைஞர்கள் குறித்தோ நாம் புரிந்துக்கொள்ள முடியாது என்பதை உணர்கிறேன்.அதோடு முழு நேர மாடு மேய்க்கும் ஒருவனுக்கு புரிந்தது கூட பள்ளியில் படித்து விடுமுறைக்கு வந்திருக்கும் ஒருவனுக்கு புரியாமல் எம்.ஜி.ஆர் போன்ற சினிமா பிம்பங்களுக்காக காத்திருப்பது, பள்ளிக்கூடங்கள் பாட திட்டங்கள் மீதான மெல்லிய விமர்சனமாக பார்க்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக