💙அக்டோபர் 2-ம் நாள்💙
மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில்; அக்டோபர் மாத வாசிப்பில் 'தலேஜு'. எழுத்தாளர் கே.பாலமுருகனின் சமீபத்திய நாவல்.
இதுவரை வாசித்த நாவல்கள்
1.ஜனவரி - உப பாண்டவம் (எஸ்.ராமகிருஷ்ணன்.)
2.பிப்ரவரி - ஆகம் (சிங்கல நாவல் - தமிழாக்கம் ரிஷ்வான் ஷெரிப்)
3.மார்ச் - தேவமலர் (லெஸ்மா லாகர் லவ் தமிழாக்கம் க.நா.சு)
4.ஏப்ரல் - தண்ணீர் (அசோகமித்திரன்)
5.மே - சுமித்ரா (கல்பற்றா நாராயணன், தமிழாக்கம் கே.வி.சைலஜா)
6.ஜூன் - அந்த மரத்தையும் மறந்த்தேன், மறந்தேன் நான் (கே.ஆர்.மீரா தமிழாக்கம் சிற்பி பாலசுப்ரமணியம்)
7.ஜூலை - பசித்த மானிடம் (கரிச்சான் குஞ்சு)
8.ஆகஸ்ட் - செம்மண்ணும் நீலமலர்களும் (எம்.குமாரன்)
- நடுகல்.காமிற்கு வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்
9.செப்டம்பர் - செலாஞார் அம்பாட் (கோ.புண்ணியவான்)
- நடுகல்.காமிற்கு வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்
இது தவிர கட்டுரை எழுதுவதற்காக மீள்வாசிப்பு செய்த நாவல்களும் வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்த சிறார் நாவலும்...
1.கரிப்புத் துளிகள் (அ.பாண்டியன்)
- நடுகல்.காமிற்கு வாசிப்பனுபவத்தை எழுதியுள்ளேன்.
2.பெர்னுய்லியில் பேய்கள் (சித்துராஜ் பொன்ராஜ்)
- நடுகல்.காமிற்கு வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன்
3.டான்டூனின் கேமிரா. (சிறார் நாவல். எஸ்.ராமகிருஷ்ணன்.
திட்டமிட்டபடி பார்த்தால், இந்த ஆண்டிற்கு வாசிக்க வேண்டிய 12 நாவல்களையும் வாசித்துவிட்டேன். ஆனால் மீள்வாசிப்பு நாவலையும் சிறார் நாவலையும் இந்தக் கணக்கில் சேர்க்க மனமில்லை.
ஆகவே அக்டோபர் மாதத்திற்கான 'தலேஜு' நாவலை வாசித்த பிறகு நவம்பரிலும் டிசம்பரிலும் எந்த இரு நாவல்கள் இதில் இணைகின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக