Pages - Menu

Pages

மார்ச் 22, 2026

- பெரிதாக ஒன்றுமில்லைதான் -


காலையிலேயே ஒரு சிட்டுக்குருவி வந்திருக்கிறது. தனியாக வந்திருக்கும் சிட்டுக்குருவியை பல நாட்கள் கழித்துதான் பார்க்கிறேன். கூட்டமாக பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டதுதான்.

எனக்கு அதை தெரியவில்லை. அதற்கும் என்னைத் தெரிந்திருக்கப் போவதில்லை.

கொஞ்ச நேரம், நாங்கள் இருவரும் தூரத்தில் இருந்தபடியே ஒருவரையொருவர் பார்த்து கொண்டே புரிந்து கொள்ள முயன்றதுபோல நான் கண்களைச் சுருக்கி அதைப் பார்க்கவும், சிட்டுக்குருவி தலையை அங்கும் இங்கும் ஆட்டியபடி அதன் முழு உடலும் அதிர்ந்தபடி என்னை பார்த்தபடியும் இருக்கிறது.

இதில் பெரிதாக ஒன்றுமில்லைதான்.

அந்தச் சிட்டுக்குருவி என்னை நலம் விசாரிக்க எங்கிருந்தோ பறந்து என் வீட்டிற்கு வந்ததாய் நான் நினைத்து என் உடல் அதிராதவரை, இதில் பெரிதாக ஒன்றுமில்லைதானே....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக