Pages - Menu

Pages

பிப்ரவரி 07, 2025

- வெறும் பொருள் -

 

தங்களின் கடவுள்களை

எல்லா இடத்திலும் பொருத்தி வைக்கிறார்கள்

எல்லா மனிதர்க்கும் பொதுவாக்கி வைக்கிறார்கள்

பார்த்து மகிழ்கிறார்கள்

மற்றவர்களையும் அழைக்கிறார்கள்

அவ்வப்போது அடிக்கவும் செய்கிறார்கள்


ஆனால் 

அவர்களால் தங்களை

வேறெந்த மனிதனிடத்திலும்

பொருந்தி நிற்க முடிவதில்லை

பொறுத்துப்போகவும் தெரியவில்லை


அதனால்தான் என்னவோ

மனிதர்களால்

கடவுளாகவே முடிவதில்லை


பரம்பொருளே தன்னை

வெறும் பொருளாக 

உணர்ந்த பின்


அந்தக் கடவுளும் 

மீண்டும் மனிதனாக பிறக்க

ஒருபோதும்

விரும்புவதேயில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக