Pages - Menu

Pages

ஜனவரி 26, 2025

- நன்றிக்கதை -

 


ஓர் எழுத்தாளனின்

இரு கரங்களிலும்

மாபெரும்

துவாரங்கள் உள்ளன


எல்லைகளற்று

எதையும் விழுங்கும்

மாயத்துவாரம் அவை


விழுங்குவதில்

எந்தவித பாரபட்சமும்

அதற்கில்லை

விழுங்குவது மட்டுமே

அதன் பிறவி குணம்


அவனின் சம்பாத்தியம்

ஆசை

கனவு

நிம்மதி

நற்பெயர்

மரியாதை

மகிழ்ச்சி

ஆரோக்கியம்

இளமை

இனிமை

என எல்லாவற்றையும்


அந்தத் துவாரம் 

உள்ளிழுத்து 

கடித்துத் தின்று 

விழுங்கி செறிக்கிறது


அதற்கு கைமாறாகத்தானே

அது

அவனெழுத கதைகளைக்

கொடுக்கிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக