வணக்கம் நண்பர்களே,
வாசகசாலை தனது 100வது இணைய இதழை வெளியிட்டுள்ளது. நீண்ட பயணமும் அர்த்தமுள்ள செயலூக்கமும் கொண்ட வாசகசாலை நண்பர்களுக்கு என் அன்பு.
இந்த 100வது இதழில் பலர் எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். அதில் இளம் படைப்பாளிகளும் அடக்கம்.
இந்த இதழில் நான் உட்பட மலேசியாவில் இருந்து 6 பேரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. கொஞ்சம் நேரமெடுத்து இந்தப் படைப்புகளை வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் நாங்கள் மகிழ்வோம்.
எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும்,
1. உமாதேவி வீராசாமி எழுதிய 'வேட்டை'
2. ம.பிருத்விராஜூ எழுதிய 'சூப்பர் ஹீரோ'
3. இராஜலெட்சுமி எழுதிய 'உத்தரவு'
4. அகிப்ரியா எழுதிய 'வளர்பிறை'
5. இ.லீ.யுவேந்திரன் எழுதிய 'கரடியும் எருமையும்'
6. தயாஜியின் குறுங்கதைகள்
மலேசிய படைப்புகள் அல்லது மலேசிய எழுத்தாளர்கள் என்றால் குறிப்பிட சிலரையே பலரும் பேசுகின்றீர்கள் வாசிக்கின்றீர்கள். அவர்களை தவிர்த்து எழுதுகின்றவர்களையும் நீங்கள் வாசிக்க வேண்டும்.
ஆனால் மிகச்சரியாக மோசமான ஒரு படைப்பையோ! எழுத்தாளராக தன்னைச் சொல்லிக் கொள்பவர்களையோ! படித்துவிட்டு நட்பும் பாராட்டி கொள்கிறீர்கள்.
வாசகசாலை இதழில் பங்குபெற்றிருக்கும் இந்த எழுத்தாளர்கள் முற்றிலும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் என பொருள் கொள்ளலாம். 'மலேசியாவில் 20 ஆண்டுகளாக புதிய எழுத்தாளர்களே இல்லை...' எனக்கூறும் போலி கருத்துக்கணிப்புகளைக் கண்டிக்கும் அதே வேளையில் புதிதாக எழுதுகின்றவர்களுக்கும் நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும்.
இவர்கள் படைப்புகளை, நிற்க.....
இப்படி சொல்ல விரும்புகிறேன். எங்கள் படைப்புகளை வாசியுங்கள் வாசித்து உங்கள் பார்வையைப் பகிருங்கள். எங்கள் குறைநிறைகளைச் சொல்லுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
மலேசிய படைப்பாளிகள் என்று நீங்கள் நினைக்கையில் எங்கள் பெயர்களையும் உங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்படிக்கு தொடர்ந்தும் சிறப்பாகவும் எழுத உழைக்கிறோம்.
இணைய இதழின் இணைப்பு...
https://vasagasalai.com/kurunkathaikal-taya-ji/
நன்றி #வாசகசாலை
அன்புடன் #தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக