Pages - Menu

Pages

செப்டம்பர் 07, 2024

கோபி கிருஷ்ணனின் 'புயல்'

 💙தினம் ஒரு கதை 7/30💙


உலகம் ரொம்பவும் மோசமானது என்கிற புகார்களுக்கு மத்தியில், நாமும்தான் அதில் ஓர் அங்கம் என பழகிவிட்டோம் என்பதை முகத்தில் அரையும் கதைகளில் இதுவும் ஒன்று.

நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவம்தான் கதைக்கரு. போலி பாவணைகளில் வாழும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு சுற்றம் காரணமா? அந்தச் சுற்றத்தில் நாமும் ஒரு அங்கமாக ஆகிவிட்டது காரணமா என்கிற கேள்வியை இச்சிறுகதை முன்வைப்பதாகப் பார்க்கலாம்.

உலகம் எத்தனை மோசமானது என மனைவிக்கு தெரியவேண்டும்  என கணவன் முடிவெடுக்கிறான். தான் தெரிந்துகொண்ட உலகம் 'சகிக்கவில்லை' என புலம்புகிறாள் மனைவி, ஏனெனில் அன்று அவள் எதிர்க்கொண்ட அனுபவம் அப்படி.

இந்த உலகம் மட்டுமல்ல உன் கணவன்; நானும் கூட மோசமானவன்தான் என  முன்கூட்டியே  சொல்வதற்கு,   மெல்ல மெல்ல மனைவிக்கு இந்த மோசமான உலகத்தை பழக்கிவிட்டு அதுதான் நிதர்சனம் என நம்பவைத்துவிட்டு தன் தவறுகளை 'எதார்த்தம்தான்' என மனைவியை எண்ண வைப்பதுதான் கணவனின் திட்டம் எனவாகவும் இச்சிறுகதையைப் பார்க்கலாம். அப்படி பார்த்தால், புயல் என்பது வெளியில் இருக்கவில்லை என்பது நமக்கு புலப்படும்.

இப்படி பல்வேறு கோணங்களில் அணுகக்கூடிய கதைதான்; தவறாது வாசித்து விடுங்கள். அந்தப் புயலை நாம் முன்னமே கண்டறிவோம்.

#தினம்_ஒரு_கதை #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

2 கருத்துகள்:

  1. வெளியே இல்லாத புயல் எப்படி நமக்குள் நுழைந்தது? நன்கு யோசித்து கருத்துறைக்க பழகவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. இது சுருக்கமான அறிமுகம் மட்டுமே. அடுத்தடுத்த அறிமுகங்களில் கருத்தில் கொண்டு கருத்துரைக்கிறேன்.

      நீக்கு