தினம் ஒரு கதை 3/30
ஜி.நாகராஜன் எழுதிய 'ஓடிய கால்கள்'. காவல் நிலையத்திலிருந்து தப்பித்து ஓடியவன் பிடிபடுகிறான். அதன் பிறகு அங்கு நடக்கும் சூழல்தான் கதை.
ஒருவேளை தப்பித்தவன் பிடிபடாமலிருந்தால் மூன்று (போலீஸ்காரர்கள்) காவல்துறையினர் வேலையை இழந்திருப்பார்கள். அவர்கள் பிடித்து வந்த கைதியை அடித்து உதைக்கிறார்கள். அடிவாங்கி உடல் வீங்கி சோர்ந்து நாக்கு வரண்டுவிட்டான் கைதி. அவனுக்கு யாரும் குடிக்கக்கூட தண்ணீரைக் கொடுக்கவில்லை.
நேரம் ஆகிறது, மூன்றாமவர் வருகிறார். அவர் 'டூ நாட் சிக்ஸ்'. ரொம்பவும் நல்லவர். தப்பு செய்ய மாட்டார்; செய்பவர்களையும் ஒன்றும் சொல்ல மாட்டார், காட்டிக்கொடுக்கவும் மாட்டார். சிறையில் அடிவாங்கி தாகத்தில் படுத்திருக்கும் ஒருவனைப் பார்த்தும் எதுவும் செய்யாமல் போகிறார்.
வெளிப்படையாக மோசமனவர்களாகத் தெரிபவர்களை விடவும், எதற்கும் எதிர்த்து குரல் கொடுக்காதவர்களும் அதனை கண்டும் கணாமல் போகிறவர்கள்தான் உண்மையில் மோசமானவர்கள் என புரிந்துகொள்ள வைக்கிறது இச்சிறுகதை.
முதல் இரண்டு நபர்களை விடவும் இம்மாதிரி மூன்றாமவர்கள்தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்.
'ஓடிய கால்களை' நீங்கள் வாசிக்கும்போது, அநீதிகளைக் கண்டும் காணாதது போல சென்றவர்களையோ; செல்பவர்களையோ நினைப்பீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக