மோட்டாரில் அவர் ஐஸ் கிரீம் விற்று கொண்டு வந்தார். 'ஐஸ் வண்டி' சொல்லும்போதே நாக்கு சில்லிடுகிறது. குழந்தையைப் போல துள்ளி குதிக்க தோன்றுகிறது.
அதைவிட குளிர்ச்சியைக் கொடுத்தது, அவர் தமிழில் விளம்பரம் செய்திருந்தார். தமிழால் பெரும் வணிகம் செய்பவர்களே தமிழைப் புறக்கணிக்கின்ற சூழலில், தமிழில் வாசிக்கவோ எழுதவோ செய்யாமல் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு கதை எழுதும் பட்டறை நடத்துகின்றோம் பேர்விழிகள் மத்தியில் தன் சிறு வணிகத்திற்கு தன்னாளான வகையில் விளம்பரத்தை தமிழில் எழுதி வைத்திருக்கிறார்.
அதற்காகவே வீட்டில் உள்ளவர்கள் எல்லோருக்குமே ஐஸ் கிரீம்களை வாங்கி கொடுத்தேன்.
தமிழில் உள்ள விளம்பரத்தை (ஐஸ் கிரீம் தமிழா என நீங்கள் வம்பிழுக்காத பட்சத்தில்) குறித்து கேட்கவும் அவர் மகிழ்ச்சியாகி பேசத்தொடங்கினார். இதுவரை இருந்த அசதியை உதரித்தள்ளினார்.
சுங்கைப்பட்டாணியில் உள்ளவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான். இம்மாதிரி சிறு வணிகர்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவு அவருக்கு வருமானத்தை மட்டும் தராது தமிழ் தன்னை காப்பாற்றுகிறது என்கிற அன்பையும் அதிகப்படுத்தும்.
கூடுதல் தகவல்; அந்தப் பனிக்கூழ் சுவையாகவே இருந்தது. பொம்மி கொஞ்சமாய் ருசி பார்த்த முதல் பனிக்கூழும் அதுதான்.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக