அம்மா அப்படித்தான் சொல்லியிருந்தார். இனி இவர்தான் எனக்கு அப்பாவாம். ஆமாம் அப்பாவாம். அப்பாவா? எப்படி இவர் எனக்கு அப்பாவாக இருக்க முடியும்.
அப்பா இனிமேல் வீட்டிற்கு வரமாட்டாராம். வரக்கூடாதாம். வாரம் ஒரு முறை மட்டும் வருவாராம். இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அப்பா ஏன் இன்னமும் வரவில்லை.
அம்மா இருக்கும் போதெல்லாம் புது அப்பா ரொம்ப கண்டிப்பானவராக இருப்பார். ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது. சாக்லெட் சாப்பிடக்கூடாது. மழையில் நனையக்கூடாது. சத்தம் போட்டு சிரிக்க கூடாது. வீட்டில் ஓடி பிடித்து விளையாடக்கூடாது. சுவற்றில் கிறுக்க கூடாது என்று எப்பவும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்.
என் அப்பா எப்பவும் அப்படி சொல்ல மாட்டார். சொல்லவே மாட்டார். அவரும் என்னுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவார். மழையில் என்னுடன் ஓடி பிடித்து விளையாடுவார். கலர் பென்சில்களை வாங்கி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
அப்போது என் அப்பா செய்ததையெல்லாம் புது அப்பா இப்போது செய்யக் கூடாது என்கிறார். அப்போது என் அப்பா செய்யாததையெல்லாம் இப்போது புது அப்பா செய்கிறார்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக