அந்தப் பேரணியை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏற்பாட்டாளர்களே எதிர்ப்பார்க்கவில்லை. வேறு யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார்கள். எப்போதோ யாரோ முயற்சித்தப் புரட்சியின் தீப்பொறி இன்று கொழுந்துவிட்டு எரிகிறது.
அதிபரின் அரசமாளிகை முழுக்க மக்கள் சூழ்ந்துவிட்டார்கள். தன் வாழ்நாளில் என்னவென்றே தெரியாத; தெரிந்து கொள்ள முடியாத ஏதேதோ பெயர் தெரியாதப் பொருட்களைப் பார்த்த மக்கள் கொஞ்ச நேரம் பதட்டமானார்கள். அடுத்த கணமே புரட்சியின் பக்கம் திரும்பிவிட்டார்கள். மக்களின் பின்னணியில் குறிப்பிட்ட சில புரட்சியாளர்கள் ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டே வந்தார்கள்.
அரசாங்கமே அலறிவிட்டது. அதிபரையும் அதிகாரிகளைக் காணவில்லை. இனி நாடு தாங்காது என புரட்சியாளர்கள் ஒரு சேர முடிவெடுத்தார்கள். பல ஆண்டுகளாக மக்களின் நலனை முன்னிருத்தி ஆளும் அரசாங்கத்திடம் சண்டையிட்ட எதிர்க்கட்சிக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தது. இனி அவர்கள் எதிர்ப்பார்த்த பல திட்டங்களை செயல்படுத்தி மக்களையும் நாட்டையும் முன்னேறறாலாம்.
புதிய அரசாங்கம். புதிய அதிகாரிகள். புதிய அதிபரின் நன்றியுரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் இன்றைய எதிர்ப்பாராத ஆட்சி மாற்றத்திற்கும் மக்களின் எழுச்சிக்கும் காரணமாக இருந்த புரட்சியாளர்களை அடையாளம் கண்டு நன்றியும் பாராட்டையும் சொன்னார்.
மறுநாள் அடையாளம் கண்ட எந்த புரட்சியாளர்களையும் காணவில்லை. புதிய அரசாங்கம் அவர்களைத் தேடவுமில்லை.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக