நேற்று காலை , ஏதும் சாப்பிடாமல் வேலைக்குப் புறப்பட்டேன். பத்து மணி வாக்கில் பசி மயக்கம் வயிற்றில் தொடங்கி காதுகளை அடைத்தது. செல்லும் வழியில் இருந்த கடையில் அமர்ந்தேன். அவ்விடம் செல்லும் போது பல சமயங்களில் அங்குதான் காலை உணவு எடுப்பேன்.
வழக்கமாக காலையில் இஞ்சி டீ குடிப்பது பிடித்த ஒன்று. இம்முறையும் இஞ்சி டீக்கு ஆடர் கொடுத்து அடுத்து செய்ய வேண்டியவற்றை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்.
இஞ்சி டீ வந்தது. சுடச்சுட ஒரு மிடறு குடித்தேன். தூக்கம் கலைந்து மண்டைக்குள்ளாக மணியடிக்கத் தொடங்கியது. அடடே இப்படியான இஞ்சி டீயை குடித்தது இல்லை. நல்ல காரம். வாய் முழுக்கவும் உணர முடிந்தது. புதிதாக ஏதோ சேர்த்திருக்கிறார்கள்.
இஞ்சி பவுடரை போடாமல், டீயில் இஞ்சியை இடித்து போட்டிருக்கிறார்களோ என தோன்றியது. பணம் கட்டும்போது டீயின் ருசி குறித்து பாராட்டி அதன் காரணத்தைக் கேட்கலாம் என்றிருந்தேன்.
டீ குவளை பாதி காலியானது. இஞ்சி டீ குவளையுடன் சின்ன கரண்டியும் கொடுப்பார்கள். அவ்வபோது கிண்டி கீழிருக்கும் இஞ்சை கலக்குவதற்கு ஏதுவாய் இருக்கும்.
பாதி இஞ்சி டீயை கலக்க தொடங்கினேன். இஞ்சி டீயின் காரமும் அதன் காரணமும் மேலே வந்து நின்றது, குட்டி கரப்பான் பூச்சியின் தலையாய்....
வணக்கம்.ஐயா.சில நேரங்களில் இது போன்ற விசயங்கள் நம்மை கடைகளில் உணவு சாப்பிடுவது என்றாலே பயத்தை வரவழைக்கிறது.நம் கைகளால் நாமே சுத்தமாக சமைத்து உணபதே என்பதே இதற்கு சரியான தீர்வு.எனக்கும் நிஜ வாழ்வில் இப்படி நிகழ்ந்துள்ளது.யாரை நாம் குற்றம் சொல்ல.....
பதிலளிநீக்கு