“இதோ பாருங்க… நான் நல்லாத்தான் இருக்கேன்.. காணாமல் எல்லாம் போகல.. யாரும் என்னைத் தேட வேண்டாம்.. என்னை நிம்மதியாக இருக்க விடுங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை… “
“இதுக்கு முன்ன நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க… எங்கம்மாவைப் பத்தி எனக்கு தெரியாதா.... அவங்க என்னை எப்படியெல்லாம் வேலை வாங்கியிருக்காங்கன்னு உங்க யாருக்கும் தெரியுமா? எங்க அப்பா எப்படியெல்லாம் திட்டுவாருன்னு உங்க யாருக்கும் தெரியுமா..? உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
“எனக்கு என் வாழ்க்கையை வாழ்ந்துக்கத் தெரியும்.. நானே விரும்பிதான் வந்திருக்கேன்.. எங்க அப்பாவோ அம்மாவோ யாரும் என்னை தேட வேண்டாம்… போலிஸ்லயும் புகார் கொடுக்க வேண்டாம். உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
“உங்க யாருக்கும் நான் தொல்லை கொடுக்கல.. நீங்க ஏன் இப்படி என்னைக் கஷ்டப்படுத்தறீங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
“எனக்கு புடிச்ச வாழ்க்கையை நான் தேர்ந்து எடுத்திருக்கேன்.. என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன்… என்னையும் அவரையும் நிம்மதியா வாழ விடுங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
“அவரு என்னையை நல்லா பார்த்துக்கறாரு.. எனக்கு அவர் முக்கியம்… அவர் ரொம்ப நல்லவரு… அவருக்கு ஏதும் ஆச்சுன்னா.. நானும் செத்துடுவேன்.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
“உங்க எல்லோரையும் கெஞ்சி கேட்டுக்கறேன். எங்களை நிம்மதியா வாழ விடுங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”
அந்தக் காணொளியை அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. பதினைந்து வயது கூட ஆகாதவள் மீது அவளின் பெற்றோருக்கோ நமக்கோ அக்கறை இருக்கக்கூடாதா என்ன?
அக்கறை இருப்பதால் தான் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செய்கின்றனர்.பெற்றவர்களைத் தவிர வேறு யார் நம்மீது அக்கறை காட்ட முடியும்.??அவசரப்பட்டு முடிவெடுத்து,அவசரமாய் வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கின்றனர் இக்கால பிஞ்சுகள்..
பதிலளிநீக்கு