#கதைவாசிப்பு_2021 முதியவளின் நிர்வாணம்
எழுத்து- ஹேமலதா
வகை
– குறுங்கதை
பிரசுரம்
– கனலி (ஏப்ரல் 2021)
குறுங்கதைக்கு ஏற்ற கச்சிதமான
கரு. ஆனால் வாசகர்களின் மனதில் இக்கதை பல்வேறாக விரியவடைகிறது. நம்மையும் ஒரு பாத்திரமாக சேர்த்துக் கொள்கிறது.
நிர்வாணமான முதியவளிடம் இருந்து
கதை தொடங்கி அவளிடமே முடியவும் செய்கிறது. ஆனால் அம்முதியவளை சுற்றி இருப்பவர்களின்
மன இயல்புகளை கதை முழுக்கவும் பார்க்க முடிந்தது.
கதை. பேருந்து நிலையத்தில் ஒரு
முதியவள் நிர்வாண நிலையில் இருக்கிறாள். அங்கு பேருந்திற்காக வருகின்றவர்கள் எப்படி
அதனை எதிர்கொள்கின்றார்கள். அவர்களின் மனவோட்டம் என்ன. அவர்களா அம்முதியவளை காப்பாற்ற
முடிந்ததா என்பதுதான் கதை.
ஒரு இளைஞன். ஒரு நடுத்தர வயதுக்காரர்.
ஒரு பெண், மகளுடன் சாலையை கடக்கும் அப்பா என ஒவ்வொருவரும் அந்த முதியவளின் நிர்வாணத்தை
எதிர்கொள்ளும் விதம் நம் சமூகத்தில் நாம் ஒதுங்கியும் கண் மூடி கடந்துவிட்ட சூழல்களை
நமக்கு நினைவுப்படுத்துகிறது. பேருந்து வரவும், மூவறும் பேருந்தில் ஏறி சுய திருப்தி
அடைந்துக் கொள்கிறார்கள்
என்ன நடக்கும் யார்தான் காப்பாற்றுவார்கள்
என்கிற கேள்வியை கடைசி வரை எழுத்தாளர் காப்பாற்றியுள்ளார். கதையின் நிறைவில், யாரால் வந்தது என்று அடையாளம்
காட்டாதபடிக்கு ஒரு வேன் வந்து நிற்கிறது.
அதிலிருந்து பச்சை சேலை அணிந்த பெண்கள் அம்முதியவளை நோக்கி வருகிறார்கள்.
யார் அழைத்திருப்பார்கள் என்கிற
கேள்விகளின் ஊடே நாம் என்ன செய்திருப்போம் என்கிற சுயபரிசோதனைக்கு இக்கதை வழி அமைக்கிறது.
#தயாஜி
கதையை வாசிக்க
http://kanali.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக