எதிர்ப்பார்க்கவில்லை. சட்டென கட்டியணைத்தாள். கன்னத்திலும் இதழ் பதித்தாள். சிரித்துக்கொண்டேச் சென்று விட்டாள். செல்வாவிற்கு ஒரே குழப்பம். எதையாவது தெரிந்துக் கொண்டாளா? இது என்ன எதற்கோ போட்டிருக்கும் தூண்டிலா என உள்ளுக்குள் குழம்பினான். ஒரு வாரமாக இவளின் சந்தேகத்தால் நொந்து நூலாகித்தான் போயிருந்தான். நல்லதற்கு என்றுதான் காலம் வருமோ என்று புலம்பலானான்.
சமையல் அறையில் இருந்து மனைவியின் குரல் கேட்கிறது.
இன்றுதான் அவர்கள் இருவரும் காதலைச் சொல்லிக்கொண்ட நாள். சமீபத்திய மனக்கசப்பில் பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள். இந்த நாளை கொண்டாடி உறவினை மீண்டும் புதுப்பிக்க அவள் எண்ணினாள். கணவனுக்கும் அம்மாதிரி எண்ணம் இல்லாமலில்லை.
குரல் கேட்டு பரபரப்பு. வழக்கம்போல எல்லாவற்றையும் சரி செய்துக்கொண்டு, காதலுடன் உள்ளே நுழைந்தான்.
சற்று முன் அவள் கொடுத்திருந்த முத்தத்தில் லிப்ஸ்டிக் கறை கன்னத்திலும் இல்லை. குழம்பினாள். ஏதோ கேட்க வாயெடுத்தாள். அதற்குள்ளாக,
“நீ என்ன.. யாரோ முத்தம் கொடுத்து நான் துடைச்சிட்டு வந்தது மாதிரியே எப்பவும் பாக்கற… இந்த சந்தேகத்தை எப்பதான் மாத்தப்போறியோ..”
என்று சில வாரங்களாக சொல்லிப் பழகிவிட்டதைச் சொல்லிவிட்டான்.
- தயாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக